இந்தியாவுக்கு USA கம்பி நீட்டுகின்றது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை சீரமைப்பது சிரமமாம்.
ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலை சீரமைக்க நீண்ட காலமாகும் என்றும், அது மிகவும் சிரமத்துக்குரிய விஷயம் என்றும் அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தரம் இடம் வகிக்க, அமெரிக்க அதிபர் ஒபாமா ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், அமெரிக்க அரசின் இந்தக் கருத்து இந்தியாவுக்கு சற்றே ஏமாற்றம் தரக் கூடிய வகையில் அமைந்துள்ளது.
இதுதொடர்பாக, அமெரிக்க வெளியுறவு துணைச் செயலர் ராபர்ட் ப்ளேக் அளித்த பேட்டி ஒன்றில், இந்தியாவுக்கு ஆதரவளிப்பது என்பதில் மாற்றமில்லை என்றாலும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை சீரமைப்பது என்பது சிரமங்கள் நிறைந்த நடவடிக்கை மட்டுமல்லாது, அது நீண்ட காலம் பிடிக்கும் என்றும் கூறியுள்ளார்.
அதேநேரத்தில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்த உறுப்பு நாடாக எந்த நிபந்தனையும் அமெரிக்க விதிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேபோல் அமெரிக்க வெளியுறவு செய்தித் தொடர்பாளர் பி.ஜெ.கிரவ்லி கூறுகையில், 'பாதுகாப்பு கவுன்சிலில் மொத்தம் 5 நிரந்த உறுப்பு நாடுகள் உள்ளன. அவற்றுக்கிடையே ஒருமித்த கருத்து ஏற்படுவது அவசியம்," என்றார்.
0 comments :
Post a Comment