சுவிஸிலிருந்து குற்றவாளிகளை நாடுகடத்தும் சட்டவாக்கத்திற்கு மக்கள் அங்கீகாரம்.
குற்றச் செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டவர்களை நாடு கடத்தும் சட்டத்திற்கு சுவிட்சர்லாந்து மக்கள் ஆதரவளித்துள்ளனர். குறித்த சட்ட மூலத்தை அமுல்படுத்துவது குறித்து நடத்தப்பட்ட சர்வஜன வாக்கெடுப்பில் அதிகளவான சுவிட்சர்லாந்து மக்கள் நாடு கடத்துவதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
கொலைக் குற்றச் செயல்கள் தொடங்கி சமூக நலத் திட்ட மோசடிகள் வரையிலான குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை நாடு கடத்துவதற்கு சுவிஸ் மக்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
வலதுசாரி சுவிட்சர்லாந்து மக்கள் கட்சியினால் பரிந்துரை செய்யப்பட்ட இந்த சட்டத்திற்கு 53 வீதமான சுவிஸ் மக்கள் ஆதரவளித்துள்ளனர். எவ்வாறெனினும், இந்த சட்டத்தின் மூலம் மனித உரிமைகள் மீறப்படலாம் என மற்றுமொரு தரப்பினர் கருத்து வெளியிட்டுள்ளனர்.
கடந்த வருடம் இஸ்லாமியர்களின் மினாத்துக்களை அமைப்பது தொடர்பிலான சட்டத்திற்கு சுவிஸ் மக்கள் ஆதரவளித்தமை உலக அளவில் பெரும் அதிர்வினை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குற்றச் செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டவர்களுக்கு சுவிட்சர்லாந்தில் தண்டனை விதிக்கப்படும் எனவும்.
0 comments :
Post a Comment