ஓய்வூதிய வெட்டுக்களை பிரெஞ்சு அரசியலமைப்புச் சபை அங்கீகரிக்கின்றது. By Alex Lantier
அக்டோபர் 27ம் தேதி பெரும் மக்கள் எதிர்ப்பையும் மீறி பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியின் ஓய்வூதிய வெட்டுச் சட்டத்திற்கு எதிரான ஒரு சட்டரீதியான சவால் ஒன்றை பிரான்சின் அரசியலமைப்பு சபை நிராகரித்தது. வெட்டுக்களை நடைமுறைப்படுத்துவதற்கு கடைசி சட்டபூர்வத்தடையான அரசியலமைப்புச் சவால் முக்கிய முதலாளித்துவ “இடது கட்சியான” சோசலிஸ்ட் கட்சியின் (PS) சட்டமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்டிருந்தது.
இன்று சட்டத்தைப் பிரகடனப்படுத்தும் சார்க்கோசி திட்டத்தை பற்றி நேற்று Le Parisien பத்திரிகை தெரிவித்ததாவது, முன்னதாக திங்களன்று சியோலில் நடைபெறவுள்ள G20 உச்சிமாநாட்டில் இருந்து அவர் திரும்பிவந்த பின்னர்தான் அது பிரகடனப்படுத்தப்படுவதாக உண்மையில் திட்டமிடப்பட்டிருந்தது.
இச்சட்டம் வேலைசெய்யும் காலத்தைப் படிப்படியாக அதிகரித்து, ஓய்வு பெறுவதற்கான குறைந்தபட்ச வயது மற்றும் முழு ஓய்வூதியம் பெறுவதற்கான வயது ஆகியவற்றை முறையே 60ல் இருந்து 62இற்கும் 65 ல் இருந்து 67 என உயர்த்தியுள்ளது. பெரும் மக்கள் எதிர்ப்பு இருந்தபோதிலும், கருத்துக் கணிப்புக்கள் 65 - 70 சதவிகிதம் வரை மக்கள் வெட்டுக்களுக்கு எதிரான வேலைநிறுத்தங்களுக்கு ஆதரவு கொடுக்கின்றனர் என்று காட்டியும்கூட, சட்டமியற்றும் நடவடிக்கை தொடர்ந்திருந்தது. வெட்டுக்களுக்கு எதிராக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த எட்டு தொடர்ந்த தேசிய ஆர்ப்பாட்ட எதிர்ப்புக்களில் மில்லியன் கணக்கான மக்கள் பங்கு பெற்றனர். துறைமுகம் மற்றும் எண்ணெய்த்துறைத் தொழிலாளர்களின் சக்திவாய்ந்த வேலைநிறுத்தம்-இத்துடன் பள்ளி மாணவர்கள் ஆர்ப்பாட்டங்களும் இருந்தன-அக்டோபர் மாத்த்தின் இரண்டாம் பகுதியில் பிரான்சை அதிர்விற்கு உட்படுத்தியது.
அரசியலமைப்புச் சபையின் அறிக்கை, ஒரு திமிர்த்தன, சட்டபூர்வ தீர்ப்பாகும். இது நிதியப் பிரபுத்துவத்தின் வர்க்க நலன்கள் மற்றும் அதன் வலதுசாரி உறுப்பினர்களின் கருத்துக்களினால் உந்துதுல் பெற்றுள்ளது. இக்குழுவில் இரு கன்சர்வேடிவ் முன்னாள் ஜனாதிபதிகள் Valerie Giscard d’Estaing, Jacques Chirac மற்றும் 2004ல் இருந்து பல வலதுசாரி அரசாங்கங்களால் நியமிக்கப்பட்ட முன்னாள் அதிகாரிகளும் சட்ட மன்ற உறுப்பினர்களும் உள்ளனர். அவர்கள் சார்க்கோசியின் UMP கட்சியிலிருந்து அநேகமாகத் தெரிந்தெடுக்கப்பட்டவர்கள்.
விவாதத்தின்போது அரசாங்கம் பாராளுமன்ற விதிமுறைகளுக்கு கீழ்ப்பணிந்து நடந்துள்ளது மற்றும் “பெண்களுக்கும் ஆண்களுக்கும் சமஉரிமை பற்றிய கொள்கையை” மதித்துள்ளது என்று சபை தீர்ப்பளித்துள்ளது. ஓய்வூதிய வெட்டுக்கள் இரு பாலாருக்கும் பொருந்தும் என்றாலும் “சிறப்பு விதிகள்” பெரிய குடும்பத்தினர் உள்ள தாய்மார்களுக்கு இயற்றப்பட்டிருந்தன.
“ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு உள்ள தேசிய ஒற்றுமையுணர்வுக் கொள்கையின் அரசியலமைப்பு ரீதியான தேவைகளை சட்டம் நிறைவு செய்துள்ளது, அதன் “நோக்கம் ஓய்வூதிய அமைப்புமுறைகளை பாதுகாத்தல் என்று உள்ளது” என்றும் சபை குறிப்பிட்டுள்ளது.
சட்டத்தில் 63 முதல் 75 விதிகளை குழு நிராகரித்தது. இவை வேலை செய்யுமிடத்தில் உடல்நல பாதுகாப்பு பற்றியவை ஆகும் -ஒரு திருத்தத்தின் மூலம் அரசாங்கம் இவற்றைச் சேர்த்திருந்தது. இந்தப் பிற்போக்குத்தன விதிகள் வேலை செய்யுமிட மருத்துவர்களின் அரச வேலைப் பாதுகாப்பு முறைகளை அகற்றிவிட்டது. இதையொட்டி அவர்கள் முதலாளிகளின் நல்லெண்ணத்தைத்தான் அதிகம் நம்பியிருக்க வேண்டும். இந்த விதிகள் “சட்ட வகைத் துணை விதிகள்” என்று குழு அறிவித்து, இவை சட்டவரைவின் பொருளுரையுடன் தொடர்பு அற்றவை, எனவே அரசியலமைப்பிற்கு விரோதமானவை என்றும் அறிவித்தது. ஆனால் தேசிய சட்டமன்றம் இப்பொழுது இந்த விதிகளை ஒரு தனிச் சட்டமாக இயற்றுவதைத் தடுக்காது.
சபையின் தீர்ப்பு, நீதித்துறை மற்றும் பாராளுமன்றம், ஜனாதிபதி செயற்பாடுகள் என பிரெஞ்சு அரசாங்கத்தின் அனைத்துப் பிரிவுகளுக்கும் பொருந்தும். இது மக்களின் விருப்பத்தை அப்பட்டமாக மீறுவது ஆகும்.
வெட்டுக்கள் ஓய்வூதியங்களைக் பாதுகாக்கும் நோக்கம் கொண்டவை, பணியிட மருத்துவர்கள் இன்னும் நேரடியாக முதலாளிகளுக்குக் கீழ்ப்படிந்தவர்கள் என்று இது உறுதிப்படுத்தினாலும், இவை சட்டத்தின் மற்ற பிரிவுகளுடன் பொருந்தாதவை என்று கூறினாலும், இவ்வாறு கூறப்படுவது சட்டம் இயற்றப்பட்ட அரசியல் உள்ளடக்கத்தை வேண்டுமென்றே பொருட்படுத்தாமல் கூறப்படுவது ஆகும்.
சார்க்கோசியின் நடவடிக்கை நிதியப் பிரபுத்துவம் பிரான்சிலும் ஐரோப்பா முழுவதும் அறிமுகப்படுத்த விரும்பும் தொடர் நடவடிக்கைகளில் ஒன்றுதான். அவை அரசாங்கச் செலவுகளானது முக்கிய வங்கிகள் மற்றும் முதலீட்டாளர்களுக்காக இருக்க வேண்டும் என்ற கருத்துடையவை. இதேபோன்ற அல்லது இன்னும் ஆழ்ந்த வெட்டுக்கள் தாராளவாத, அல்லது சமூக ஜனநாயக அரசாங்கங்களால் கிரேக்கம், அயர்லாந்து, போர்த்துக்கல் மற்றும் ஸ்பெயினால் இந்தக் குளிர்காலத்தில் ஐரோப்பியக் கடன் நெருக்கடியின் வெடிப்பு ஏற்பட்டதில் இருந்து இயற்றப்பட்டுள்ளன. சமீபத்தில் பிரிட்டனில் தேர்ந்தெடுக்கப்பட்ட கன்சர்வேடிவ் தலைமையிலான கூட்டணி அரசாங்கமும் செய்துள்ளது. இத்தகைய வெட்டுக்கள் உறுதியான ஓய்வூதியங்கள் மற்றும் தொழிலாளர்களில் வாழ்க்கைத் தரங்கள் உத்தரவாதமாக இருப்பதை அழிக்கும் நோக்கம் கொண்டவை.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தலைமைப் பொருளாதார வல்லுனர் Olivier Blanchard, Europe1 வானொலிக்கு அரசாங்கம் ஒரு “முக்கியமான” மற்றும் “கனம் நிறைந்த” வெட்டுக்களைச் சாதித்துள்ளது என்றும், இது “20 ஆண்டுகளுக்கு முன்பு செய்யப்பட்டிருக்க வேண்டும்” என்றும் கூறினார். இவர் இன்னும் கூடுதல் வெட்டுக்கள் வேண்டும் என்ற கருத்தையும் தெரிவித்தார். “இந்தச் சீர்திருத்தம் கடைசி வரை தொடர்வதற்குப் போதுமா? அனேகமாக இல்லை, நாம் அதைத் தொடர வேண்டும்.”
இன்னும் பெரும் தாக்குதல்கள் வேலை செய்யும் நிலைமைகளில் வரும் என்று Blanchard அடையாளம் காட்டியுள்ளார். CDI மற்றும் CDD அதாவது நிரந்தர மற்றும் தற்காலிக வேலை ஒப்பந்தங்களுக்கு இடையே உள்ள வேறுபாடு “சீர்திருத்தப்பட வேண்டும்”, இருவித ஒப்பந்தங்களும் “இன்னும் சமமாக்கப்பட வேண்டும்” என்றார். இன்னும் குறிப்பாகக் தெளிவாக்குமாறு கோரப்பட்டதற்கு பிளாஞ்சார்ட் “வேலைப் பாதுகாப்புக்கள் நாட்கள் செல்லச் செல்ல இலகுவாக இருக்க வேண்டும்” என்றார்.
வேலை செய்யுமிட உடல்நலமானது ஓய்வூதிய வெட்டுக்களுடன் தொடர்பற்றவை என்னும் சபையின் கூற்றைப் பொறுத்தவரை, அது தவறாகும். வெட்டுக்களானது தொழிலாளர்கள் ஓய்வு பெறுவதற்குத் தேவையான இயலாமை விகிதம் மற்றும் காயமுற்ற தொழிலாளர்கள் பற்றிய பிற காரணிகளை அதிகரித்துள்ளது. (See: “French Senate votes pension cuts over mass opposition”). இதன் விளைவாக, முதலாளிகளும் அரசும் வேலை செய்யுமிட மருத்துவர்கள் தேவையான மருத்துவச் சான்றிதழ்களை காயமுற்ற தொழிலாளர்களுக்கு கொடுக்காமல் இருப்பதில் நேரடியான நிதிய நலன்களைக் கொண்டிருப்பது உறுதி செய்யப்படுகிறது.
Le Monde பத்திரிகைக்கு கொடுத்த பேட்டியொன்றில், தொழிற்சங்க அதிகாரி பேர்னார்ட் சலெங்ரோ திட்டமிடப்பட்டுள்ள வேலை செய்யுமிட சுகாதார விதிகள் பற்றிய மாற்றங்கள் நாசிக்களிடம் இருந்து விடுதலையை பிரான்ஸ் அடைந்தபோது, 1946ல் பெறப்பட்ட சமூக நலன்களை அழித்துவிட்டது என்று குறிப்பிட்டார். “இத்திருத்தத்தையொட்டி, நாம் மீண்டும் [விஷி ஒத்துழைப்புத் தலைவர் மார்ஷல் பிலிப்] Pétain முறைக்குத் திரும்புகிறோம், ஏனெனில் தற்பொழுது வேலை செய்யுமிட மருத்துவர்கள் சட்டபூர்வமாக வேலை மேற்பார்வையாளர்களால் வேலைநீக்கம் செய்யப்படுவதற்கு எதிராக சுதந்திரமாக நடக்க உறுதியளிக்கப்பட்டுள்ளது.”
சலெங்ரோ வேலை செய்யுமிட மருத்துவர்கள் ஏற்கனவே முதலாளிகள் நலன்களின் தயவில் பெரிதும் உள்ளனர் என்று குறிப்பிட்டார்: “இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு Canard Enchaîné [ஒரு அங்கத விசாரணை வார ஏடு] ல் ஒரு விசாரணை பிரான்சின் 100 பிரிவுகளில் 66ல் வேலை செய்யுமிட சுகாதாரச் சேவைகள் மெடெப் (வணிகக் கூட்டமைப்பு) காணும் பிரச்சினைகளையே கொண்டுள்ளன.” நிதி உதவியளித்தல், மற்றும் வேலை செய்யுமிடங்களில் உள்ள சுகாதார அதிகாரிகள் அநேகமாகக் கடனில் இருப்பதால் கடன்களுக்கு ஏற்பாடு செய்தல் ஆகியவை பற்றிய மெடெப்பின் உதவியை அவர் குறிப்பிட்டார்.
அரசியலமைப்புச் சபையின் இன்னும் நேர்மையான தீர்ப்பு பிரெஞ்சு அரசியலமைப்பில் பிரான்சை ஒரு “சமூகக் குடியரசு” என்று வரையறை செய்திருப்பதின் உட்குறிப்பின்படி சார்க்கோசியின் இலக்கான அடிப்படை சமூகப் பாதுகாப்புக்களை குறைப்பது என்பதற்கான சட்டம் அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று கூறியிருக்கும்.
ஆனால் இது ஐரோப்பியத் தொழிலாளர்கள் எதிர்கொண்டிருக்கும் முக்கிய அரசியல் பிரச்சினைகளை அம்பலப்படுத்தியிருக்கும்: தொழிலாளர்களின் சமூக உரிமைகள் ஆளும் வர்க்கத்தின் பண வெறியுடன் பொருந்ததாது, ஏனெனில் தொழிலாளர்களைக் கொள்ளை அடிக்க வேண்டும் என்று உலக முதலாளித்துவ நெருக்கடியினால் உந்துதல் பெற்றுள்ளது என்பதே அது. தொழிலாள வர்க்கத்திற்கும், இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய சகாப்தத்தில் கொடுக்கப்பட்ட சமூகநலச் சலுகைகளை இனியும் கொடுக்க இயலாத, ஒரு “இடது” அரசியல் ஸ்தாபனத்திற்கும் இடையேயுள்ள ஒரு புறநிலை சமூக மோதலை அது அடிக்கோடிட்டுக் காட்டியிருக்கும்.
குறிப்பாக, அரசியலமைப்புச் சபையின் தீர்ப்பிற்கு PS ன் விடையிறுப்பு-இது முற்றிலும் எதிர்பார்க்கப்பட்டதே, ஏனெனில் அதன் வலதுசாரிச் சான்றுகள் அவ்வாறு உள்ளன-இழிந்த, மேம்போக்கான வகையறையில் சார்க்கோசியின் வெட்டுக்களை அது சபையிடும் முறையிடச் செய்திருந்த முடிவைத்தான் உயர்த்திக் காட்டுகிறது. சோசலிஸ்ட் கட்சியின் அறிக்கைகள் அது சார்க்கோசியின் வெட்டுக்களையொட்டிய சமூக சிக்கன நடவடிக்கைகளுக்கு ஆதரவைக் கொடுக்கிறது என்பதைத் தெளிவுபடுத்துகின்றன.
PS ன் பாராளுமன்ற உறுப்பினர் Maniel Valls கட்சியின் தலைவர் Martine Aubry ஐ இன்னும் வெளிப்படையாக சார்க்கோசி வெட்டுக்களிலுள்ள பல கூறுபாடுகளைப் பற்றி ஆதரவு தெரிவிக்காததற்காகக் குறைகூறியுள்ளார். “வேலை செய்யும் கால அதிகரிப்பிற்கு நம் ஆதரவு பற்றி போதுமான தெளிவை நாம் காட்டவில்லை. இது ஓய்வூதிய வயது 60 என்பதை மீண்டும் கொண்டுவரக்கூடும் என்ற தெளிவற்ற உணர்வைக் கொடுக்கிறது.” PS இடம் ஒரு “நம்பகமான” தீர்வு இல்லை என்பதற்கு Valls குறைகூறினார்-அதாவது வங்கிகளின் கோரிக்கைகளுக்கு இணங்கிய வகையில்.
சர்வதேச நாணய நிதியத்திற்கு தலைமை தாங்கும் முக்கிய PS உறுப்பினர் டொமினிக் ஸ்ட்ராஸ் கான் குறைந்தபட்ச ஓய்வூதியத் தகுதி பெறும் வயது 60 என உறுதியாக இருப்பது என்பது ஒரு ”மாற்றமுடியா கோட்பாடாக” இருக்கக் கூடாது என்றார்.
இத்தகைய விடையிறுப்பு PS ஐ மட்டும் இல்லாமல் சார்க்கோசியின் வெட்டுக்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த தொழிற்சங்கத் தலைவர்களையும் அம்பலப்படுத்துகிறது. அவர்கள் எவ்விதத் தீவிர எதிர்ப்பையும் திரட்டத் தயாராக இல்லை. மாறாக அவர்கள் வேலைநிறுத்தம் செய்திருந்த எண்ணெய்த்துறை தொழிலாளர்கள் பொலிஸின் வேலைநிறுத்த முறியடிப்பு நடவடிக்கையை எதிர்கொண்டபோது ஒற்றுமையுணர்வை காட்ட தொழில்துறை நடவடிக்கை எதையும் செய்யத் தயாராக இல்லை. அதே நேரத்தில் சோசலிஸட் கட்சித் தலைமையிலான “இடது” கூட்டணி சார்க்கோசியின் வெட்டுக்களை இறுதியில் அகற்றும் என்ற போலி நம்பிக்கைகளைக் கொடுத்தனர்.
திங்களன்று அனைத்து தொழிற்சங்கக் கூட்டு, வெட்டுக்களுக்கு எதிராக நடத்தவுள்ள கடைசி ஒரு நாள் தேசிய எதிர்ப்பு தினமாக நவம்பர் 23 இனை அறிவித்துள்ளது. அவ்வாறான ஒரு எதிர்ப்பை நவம்பர் 4ம் தேதி நடத்த இருப்பதாகவும் அறிவித்திருந்தனர்.
இந்த அறிவிப்பின் உள்ளடக்கம் WSWS வேலைநிறுத்த ஆரம்பத்தில் விடுத்த எச்சரிக்கைகளை முற்றிலும் நிரூபித்திருக்கிறது. தொழிலாளர்களுக்கு ஒரே முன்னோக்கிய பாதை தொழிற்சங்கங்கள் மற்றும் “இடது” கட்சிகளிடம் இருந்து சுயாதீனமாக அரசியல் போராட்டம் நடத்துவதுதான் என்று WSWS எச்சரித்திருந்தது.
நடவடிக்கை “பலவகைகளில் இருக்கும்” என்று தொழிற்சங்கங்கள் கூறியுள்ளன. ஒவ்வொரு சங்கத்தினதும் “உள்ளூர் அல்லது தொழில்துறை பிரிவு” எடுக்கும் ஆர்ப்பாட்டங்கள் அல்லது வேலைநிறுத்தம் என்று பலவித எதிர்ப்பு வழிவகைகள் அடங்கி இருக்கும். இதனால் நாடு தழுவிய நடவடிக்கையில் ஒருங்கிணைப்பு இருக்காது, எதிர்ப்பை ஒழுங்குற அமைத்தலும் இருக்காது. எண்ணெய்த் துறை மற்றும் துறைமுகத் தொழிலாளர்களை தனிமைப்படுத்திய பின், தொழிலாளர்களுக்கு ஒரு பரந்த முன்னோக்கை அளிக்காத நிலையில், தொழிற்சங்கங்கள் ஒரு சரண்டைவதற்குத்தான் தயாரிப்புக்களை நோக்கிச்செல்கின்றன.
0 comments :
Post a Comment