வெளிநா ட்டிலுள்ள புலிகளை கே.பி அரசிற்கு காட்டி கொடுக்கின்றார்.
இலங்கை புலனாய்வுப் பிரிவினரின் கட்டுபாட்டிலுள்ள கே.பி எனப்படும் குமரன் ப த்மநாதன் வெளி நாட்டுப் புலிகள் அரசிற்கு காட்டிக்கொடுத்து வருவதாக அரசின் பங்காளிக் கட்சியான ஜாதிக்க கெல உறுமய தெரிவித்துள்ளது. முன்னாள் பயங்கரவாதிகளான கருணா , பிள்ளையான் , கேபி போன்றோருக்கு அரசாங்கம் கூடுதலாக சுதந்திரம் கொடுத்துள்ளது என பல தரப்பாலும் மேற்கொள்ளப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக நேற்று வியாழக்கிழமை தேசிய நூலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய ஜாதிக ஹெல உறுமயவின் பேச்சாளர் ஊடகச் செயலாளருமான நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க கூறுகையில் விசாரணைகளை நடத்த வில்லை என எவரும் தவறாக புரிந்து கொள்ளக்கூடாது எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக உண்மை நிலையை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும். கருணாவும் பிள்ளையானும் புலிகள் இயக்கத்திலிருந்து விலகி அரசாங்கத்துடன் இணைந்து பிரபாகரனையும் அவரது ஆயுதப்போராட்டத்தையும் அழிக்க உதவி செய்தார்கள். அதேபோன்று இலங்கை புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட புலிகளால் சர்வதேச செயற்பாட்டாளர் குமரன் பத்மநாதன் தற்போது சர்வதேசத்தில் மறைந்துக் கொண்டுள்ள புலிகளை வேட்டையாடும் நடவடிக்கைக்கு அரசாங்கத்திற்கு உதவுகின்றார்.
இவ்வாறு அரசாங்கம் நாட்டை எதிர்கால அச்சுறுத்தலில் இருந்து பாதுகாத்து திட்டமிட்டமுறையில் முன்னாள் புலி இயக்க உறுப்பினர்களை பயன்படுத்தி வருகின்றது.
0 comments :
Post a Comment