ஜே.வி.பி. க்கும் ஹிஸ்புல்லா போராளிகளுக்கும் தொடர்புள்ளது: கோத்தபாய ராஜபக்ச
ஜே.வி.பி. கட்சி மற்றும் அதனுடன் இணைந்த கட்டமைப்புக்கள் அனைத்தும் லெபனான் ஹிஸ்புல்லா போராளிகளுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருப்பதாக இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச குற்றம்சாற்றியுள்ளார். இதன் காரணமாகவே ஜே.வி.பி. ஏற்பாடு செய்திருந்த அரசுக்கெதிரான ஆர்ப்பாட்டத்தில் லெபனான் வாசியான மொஹம்மத் ஹாதிம், தன் மனைவி சகிதம் பங்கு கொண்டதாக அவர் கூறியுள்ளார்.
எனவே ஜே.வி.பி. மற்றும் ஹிஸ்புல்லா போராளி அமைப்புகளுக்கிடையிலான நெருக்கமான தொடர்புகள் குறித்து குற்றப்புலனாய்வுத்துறையினர் தற்போது விரிவான விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
தற்போதைய நிலையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு ஒருநாள் கூட ஆகாத நிலையில் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் அமைப்பு மற்றும் ஜே.வி.பி. என்பன ஹிஸ்புல்லாஹ் போராளிகளுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருப்பதற்கான ஆதாரங்கள் கிட்டியுள்ளதாக குற்றப் புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.
0 comments :
Post a Comment