விக்கிலீக்ஸ் ஜூலியன் அசாஞ்சை கைது செய்ய அனுமதி
விக்கிலீக்ஸ் இணையதள நிறுவனர் ஜூலியன் அசாஞ்சை கைது செய்ய ஸ்வீடன் நாட்டு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அமெரிக்காவின் போர்க்குற்றங்களை தமது இணையதளம் மூலம் அம்பலப்படுத்தியவர், ஜூலியான் அசாஞ்ச். ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த இவர் மீது ஸ்வீடனில் இரண்டு பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக வழக்கு உள்ளது. இதுதொடர்பாக அவரை விசாரிக்க வேண்டும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டு வந்தனர்.
இந்நிலையில், அசாஞ்சை கைது செய்ய ஸ்வீடன் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதே போன்ற கைது உத்தரவை ஆகஸ்ட் மாதம் பிறப்பித்த ஸ்வீடன் நீதிமன்றம், மறுநாளே அந்த ஆணையைத் திரும்பப் பெற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
இந்தக் குற்றச்சாட்டுகள் தன் மீது சேறுபூசும் நடவடிக்கையின் ஒரு பகுதி என்று அசாஞ்ச் கருத்து தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment