பொன்சேகா திடீர் சுகயீனமுற்றாரா? சிறைக்கூண்டில் நீர் ஒழுக்கா?
இராணுவக் குற்றவியல் நீதிமன்றினால் 30 மாதகால சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா இன்று திடீரென சிறைச்சாலைகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் திடீர் சுகயீனமுற்றமையால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் ஊடகமொன்றுக்கு தெரிவித்திருந்தார்.
அதே நேரம் சரத் பொன்சேகா அடைக்கப்பட்டுள்ள சிறைக்கூண்டில் ஏற்பட்டுள்ள நீர் ஒழுக்கு காரணமாக அவர் சிறைச்சாலைகள் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக அவரது பாரியார் அனோமா பொன்சேகா தெரிவித்துள்ளார். நேற்றிரவு பெய்த கடும்மழைகாரணமாக அவர் அடைக்கப்பட்டிருந்த சிறைக்கூண்டின் கூரையில் 5 க்கு மேற்பட்ட துவாரங்களால் ஒழுக்குகள் ஏற்பட்டபோது நீரை தாங்கிப்பிடிப்பதற்கு சிறைச்சாலை அதிகாரிகளால் பாத்திரங்கள் வழங்கப்பட்டபோதும், அது பலனளிக்காமல் அவர் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதுடன், துவாரங்கள் சரிசெய்யப்படும் என சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment