மூன்று நாள் உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிச்செல் ஆகியோருக்கு மும்பை சத்திரபதி விமாந்ன நிலையத்தில் சிகப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளதுடன் ஒபாமா மற்றும் அவரது மனைவி மகாராஷ்டிரா முதல்வர் அசோக் சவான் மற்றும் சல்மான் குர்ஷேத் ஆகியோரால் வரவேற்கப்பட்டுள்ளனர்.
விமானநிலையத்திலிருந்து ஒபாமாவும் அவரது மனைவியும் ஹெலிகாப்டரில் மரைன் ஒன் புறப்பட்டுச் சென்றனர். அங்கிருந்து அவர்கள் தங்கும் விடுதியான டாஜ் விடுதியின் தங்கியுள்ளனர். மும்பையில், அமெரிக்க அதிபர் ஒபாமா தங்கியுள்ள ஓட்டல் அருகே நேற்று இரவு துப்பாக்கி வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்ள்ளது. நேற்று இரவு திடீரென ஓட்டல் அருகே துப்பாக்கி குண்டு வெடித்தது. இதனால், அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் பரபரப்படைந்தனர். பின், போலீஸ் அதிகாரியின் துப்பாக்கி ஒன்று தவறுதலாக வெடித்ததாக தெரியவந்தது. இது குறித்து மும்பை போலீஸ் கமிஷனர் சஞ்சீவ் தயாள் கூறியதாவது:பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த எஸ்.ஐ சவுத்திரி, பணி முடித்து திரும்பிக் கொண்டிருந்தபோது அவரது கைத்துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில், அவரது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இவ்வாறு சஞ்சீவ்தயாள் கூறியுள்ளார்.
தாஜ் ஹோட்டலில் தங்கியுள்ள ஒபாமா 26-11 பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு உயிர்பிழைத்தவர்களை சந்திக்கின்றார்.
ஒபாமாவின் வருகையை முன்னிட்டு மும்பை நகரமே இன்று பெரும் பாதுகாப்பு கோட்டையாக மாற்றப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபராக பதவியேற்று தன் முதல் பதவிக்காலத்திலேயே இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ளத முதல் அமெரிக்க அதிபர் ஒபாமா என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பையில் ஒன்றரை நாட்களுக்கு இருந்து பிறகு தலைநகர் புது டெல்லி செல்கிறார். இங்கு பிரதமர் மன்மோகன் சிங்கை அவர் சந்திக்கிறார்.
மகாத்மா காந்தி சமாதியையும் ஒபாமா பார்வையிடுகிறார்.
No comments:
Post a Comment