Thursday, November 11, 2010

மேஜர் ஜெனரல் சாவேந்திர சில்வாவிற்கு நீதிமன்று அழைப்பாணை.

வெள்ளைக்கொடியுடன் சரணடையவந்த புலிகளின் முக்கியஸ்தர்களை சுட்டுக்கொல்லுமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெரிவித்ததாக வெளியான செய்தி தொடர்பாக முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா மீது தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் சாட்சியமளிக்க மன்றில் ஆஜராகுமாறு ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் பிரதி நிரந்தர வதிவிட பிரதிநிதி சவேந்திர சில்வாவிற்கு அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட வழக்கின் 3 ஆவது சாட்சியாளராக எதிர்வரும் 15 ஆம் திகதி கொழும்பு மேல்நீதிமன்றில் ஆஜராகி சாட்சியமளிக்குமாறு அவருக்கு மேல்நீதிமன்றத்தினால் முன்அறிவித்தல் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

வெள்ளைக் கொடி விவாகரம் தொடர்பான இன்றைய விசாரணைகளின் போது அரச தரப்பு பிரதி வழக்கறிஞர் வசந்த பண்டார கேட்டுக்கொண்டதன் பிரகாரம் ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் பிரதி நிரந்தர வதிவிட பிரதிநிதி சவேந்திர சில்வாவிற்கு சாட்சியளிக்க வருமாறு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment