Tuesday, November 30, 2010

அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் த.தே.கூ வின் முடிவுக்கு பசில் பாராட்டு.

அரசினால் முன்வைக்கப்பட்டுள்ள வரவுசெலவுத்திட்டத்தை எதிர்க்காமல் அரசு வடகிழக்கில் முன்னெடுக்கும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பது என தமிழ் தேசியக் கூட்டமைப்பு எடுத்துள்ள முடிவினை பாராட்டுவதாக நேற்று வரவு - செலவுத் திட்டத்தின் ஆறாவது நாள் விவாதத்தை நிறைவு செய்து வைத்து உரையாற்றிய அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அத்துடன் நாட்டின் எந்த ஒரு பிரதேசத்திலும் எந்த ஓர் இனத்தினதும் இன விகிதாசாரத்தை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என்று அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் பசில் ராஜபக்ஷ மேலும் கூறுகையில்,

ஜனாதிபதியின் இரண்டாவது பதவியேற்புக் குப் பின்னர் சமர்ப்பிக்கப்பட்ட முதலாவது வரவு - செலவுத் திட்டம் இதுவாகும். இந்த விவாதத்தின் நிறைவு உரையை இரண்டு பிரிவுக ளாக ஆற்ற விரும்புகிறேன். முதலில் எதிர்க் கட்சியினர் முன்வைத்த விமர்சனங்களுக்குப் பதில் அளிக்க விரும்புகிறேன்.

வரவு செலவுத்திட்டத்திற்கு எதிராக வாக்களிக்காதிருக்க தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எடுத்த முடிவைப் பாராட்டுகிறேன். வடக்கின் மீள்குடியேற்றப் பணிகளுக்கு ஒத்துழைப்பதாகவும் அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

வடக்கில் மீள்குடியேற்றம் என்பது சுலபமானது அல்ல. சகல கட்டமைப்புகளும் அழிக்கப் பட்ட நிலையில் பெரும் தொகை யான கண்ணிவெடிகள் புதைக்கப்பட்ட சூழ்நிலையில் இந்தப் பணிகளை மேற்கொள்கின்றோம். முதலில் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளை மேற்கொள்கின்றோம். சிலர், மீள்குடியேற்றத்திற்கு நிதி ஒதுக்கப்பட வில்லை என்று கூறுகிறார்கள்.

வடக்கு நீர்ப்பாசனத்திற்கென 1385 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வீதி புனரமைப்புக்கென 1065 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. கண்ணிவெடிகளை அகற்ற 700 மில்லியன் செலவிடப்பட்டுள்ளது. இவ்வாறு வடக்கு அபிவிருத்திக்கென இரண்டு இலட்சத்து 44 ஆயிரத்து 835 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

எனவே மக்களைத் தவறாக வழிநடத் தாதீர்கள். நாடு முன்னேறுவதற்கு நீர், மின்சாரம் இன்றியமையாத வளங்களாகும்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்முடன் இணைந்து செயற்பட முன்வந்துள்ளமை பாராட்டத்தக்கது. வடக்கு, கிழக்கு மக்கள் கடந்த தேர்தல்களில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் அரசாங்கத்தின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குமே வாக்களித்துள்ளனர்.

வடக்கில் இந்திய இராணுவம் இருந்த போதும் சரி. போர் நிறுத்த உடன்படிக்கை அமுலில் இருந்த காலமானாலும் சரி உயர் பாதுகாப்பு வலயங்களில் யாரும் மீளக்குடியமர்த்தப்படவில்லை. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே முதன் முதலாகத் தமிழ் மக்களைக் குடியமர்த்தினார். 20 வருடங்களுக்கு முன் இடம்பெயர்ந்த முஸ்லிம்களைக்கூட குடியமர்த்தவில்லை.

நாட்டின் எந்த ஒரு பிரதேசத்திலும் எந்த ஒரு இனத்தினதும் இன விகிதாசாரத்தைக் குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வில்லை. அந்த மக்களின் உரிமைகளைப் பெற்றுத்தருவோம்.

பல அரச நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதாக ஐ.தே.க. குற்றஞ்சாட்டியது. ஆனால் 38 அரச நிறுவனங்கள் இலாபமீட்டுவது குறித்து அவர்கள் எதுவும் கூறவில்லை. 2009 இல் 11,981 மில்லியன் ரூபா இலாபம் ஈட்டப்பட்டது. ஆனால் 2010 இல் இன்றுவரை 20 மில்லியன் ரூபா இலாபம் கிடைத்துள்ளது. இந்த வருட முடிவில் 26 மில்லியன் ரூபாவாக இது அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நஷ்டம் ஈட்டும் அரச நிறுவனங்களை இலாபமீட்ட வைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த வரவு - செலவுத் திட்டம் எந்த மாதிரி என எதிர்க் கட்சி கேள்வி எழுப்பியது. இது இலங்கை மாதிரி 'மஹிந்த சிந்தனை' மாதிரியாகவே இந்த வரவு - செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.

தோட்டப் பகுதி உட்பட சகல இனப் பிரிவினரையும் உள்ளடக்கியதாகவே வரவு - செலவுத் திட்டம் முன்வைக்கப் பட்டுள்ளது.

மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக எதிர்க் கட்சி குற்றச்சாட்டியது. ஆனால் 90 அலகிற்கு அதிகம் பயன்படுத்தினாலே கட்டணம் உயரும். மொத்த மின் பாவனையாளர்களில் 70 வீதமானவர்கள் 90 அலகை விட குறைவாகவே பயன்படுத்துகின்றனர். குறைவாக மின்சாரம் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் மற்றும் எம்.பிகளுக்கும் 90 அலகிற்கு குறைவாக மின்சாரத்தை பாவிக்குமாறு கோருகிறோம்.

சிறிய மற்றும் நடுத்தர வியாபாரிகளுக்கு கட்டண உயர்வு அமுலாகாது. பாடசாலைகள், மதஸ்தலங்களுக்கான மின் கட்டணம் 25 வீதத்தினால் குறைக்கப்பட்டு ள்ளது. எதிர்வரும் போகத்தின் போது 1550 மில்லியன் மெற்றிக்தொன் நெல் அறுவடை எதிர்பார்க்கப்படுகிறது. இதன் படி இந்த வருடத்தில் 4189 மெற்றிக்தொன் மொத்த நெல் உற்பத்தி எதிர்பார்க்கப்படுகிறது. இது 17 வீத அதிகரிப்பாகும். இதனூடாக சுதந்திரத்தின் பின் அதிகூடிய நெல் உற்பத்தி இந்த வருடத்திலே பதிவாகிறது. வடக்கு, கிழக்கிலும் இம்முறை கூடுதலான நிலங்களில் நெல் பயிரிடப்பட்டுள்ளது.

குரக்கன் மற்றும் உழுந்து உற்பத்தியில் தன்னிறைவு காணும் வகையில் இம்முறை வன்னிப் பிரதேசத்தில் குரக்கன் மற்றும் உழுந்து பயிரிடப்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவி ஏற்றது முதல் அரச ஊழியர்களுக்கு பல்வேறு நிவாரணங்கள் அளிக்கப்பட்டு வந்தன. இம்முறை வரவு - செலவுத் திட்டத்தினூடாக குறைந்தது 1250 ரூபா சம்பளம் அதிகரிக்கிறது. சிலருக்கு 3 ஆயிரம் ரூபாவுக்கு மேல் உயருகிறது.

2010 இல் மின் உற்பத்தி 10 வீதத்தினால் அதிகரித்துள்ளது. வடக்கு, கிழக்கிலும் மின் உற்பத்தியில் இணைந்துள்ளதே இதற்குக் காரணம். வடக்கு, கிழக்கில் மின் உற்பத்தியை 50 வீதத்தினால் உயர்த்தத் திட்டமிட்டுள்ளோம். படகுகளின் பதிவுக் கட்டணம், திருத்தக் கட்டணம் என்பன நீக்கப்பட்டுள்ளன.




0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com