Tuesday, November 30, 2010

விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள விடயங்களை நாம் எப்போதோ கூறியிருந்தோம். விமல்.

சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கு எதிராக செயற்படும் நாடுகளில் ஐக்கிய அமெரிக்க ராஜ்யமே உள்ளது என்பதனை நாம் எப்போதோ கூறியிருந்தோம் எனவும் அவ்விடயத்தினை இப்போது விக்கிலீக் இணையத்தளத்தில் வெளியாகியுள்ள ஆதாரங்கள் ஊர்ஜிதப்படுத்தியுள்ளது எனவும் வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனால் நியமிக்கப்பட்டுள்ள கமிட்டியை நியமிக்குமாறு ஐக்கிய அமெரிக்க ராஜ்யமே அவரை நிர்பந்தித்துள்ளது என்பது விக்கிலீக்ஸ் இணையத்தளம் வெளியிள்டுள்ள தகவல்களுடாக நிருபனமாயுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் நிகழ்சி நிரலின் கீழ் இயங்க இன்றைய இலங்கை ஜனாயக சோசலிச குடியரசின் அரசு மறுக்கின்றபோது, அவர்களின் நிகழ்சி நிரலின்கீழ் செயற்படக்கூடிய அரசு ஒன்றினை கொண்டுவர அமெரிக்கா செயற்திட்டங்களை மேற்கொள்கின்றமை விக்கிலீக்ஸ் இணையத்தளம் வெளியிட்டுள்ள ரகசியச் செய்திகளிலிருந்து தெளிவாகியுள்ளது எனவும் கூறியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com