இலங்கையில் அதிகரித்து வரும் பாலியல் பலாத்காரம்
இலங்கையில் கடந்த 10 ஆண்டுகளில் குற்றச்செயல்களின் தொகை குறைந்துள்ளன. ஆயினும் பாலியல் பலாத்காரம் நிகழ்வுகள் அதிகரித்துள்ளன. எனினும் இதில் போர்க்காலத்தில் வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற பாலியல் பலாத்கார நிகழ்வுகள் சேர்க்கப்படவில்லை.
2009 ஆம் ஆண்டில், நாட்டில் 57 ஆயிரத்து 340 பொதுவான குற்றச்சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இது கடந்த 2008 ம் ஆண்டைக்காட்டிலும் 3530 என்ற எண்ணிக்கையில் குறைவானதாகும். எனினும் பாலியல் பலாத்கார நிகழ்வுகள் அதிகரித்துள்ளன.
கடந்த ஆண்டில் மாத்திரம் இரத்தினபுரியில் 107 பாலியல் பலாத்கார நிகழ்வுகள் பதிவாகியுள்ளன. அநுராதபுரத்தில் 98 நிகழ்வுகளும், கேகாலையில் 82 நிகழ்வுகளும், எல்பிட்டியவில் 68 நிகழ்வுகளும், மாத்தறையில் 65 நிகழ்வுகளும் , மொனராகலையில் 64 நிகழ்வுகளும் பதிவாகியுள்ளன.
இதேவேளை குற்றச்செயல்களை பார்த்தால், கொழும்பின் புறநகரான நுகேகொடையில் அதிகூடிய 4909 நிகழ்வுகள் பதிவாகியுள்ளன. இதற்கடுத்ததாக களனி, கல்கிஸை, கம்பஹா ஆகிய இடங்களில் குற்றச்செயல்கள் அதிகமாக பதிவாகியுள்ளன.
0 comments :
Post a Comment