Tuesday, November 2, 2010

தமிழ்செல்வலுக்கான சிலை புலிகளுள் முரன்பாடுகள் முற்றுகின்றது.

மாவீரன் நெப்போலியன் பிறந்தநாட்டில் புலிச்செல்வனுக்கு சிலைவைக்கப்பட்டுள்ளது. புலிகளியக்கம் சந்தித்த பின்னடைவுகளுக்கும் , அவ்வியக்கத்தின் அழிவிற்குமான பெரும்பங்களிப்பை செய்தவர் என புலிகளின் பெரும்தரப்பினரால் விமர்சிக்கப்பட்டுவரும் தமிழ் செல்வனுக்கு பிராண்ஸில் சிலை வைக்கப்பட்டமை அவ்வியக்கத்தின் பிரபாகரன் , பொட்டு , சங்கர் , பால்ராஜ் , சூசை போன்றோரை கொச்சைப்படுத்திய செயலாகும் என அவ்வியக்கத்தினுள் மேலும் முரன்பாடுகள் தோன்றியுள்ளதாக தெரியவருகின்றது.

எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள மாவீரர் தின நிகழ்வுகளின்போது பிரபாரனுக்கான அஞ்சலிகள் நிகழ்த்துவதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நிகழ்வுகளுக்கு இடையூறுகளை செய்வதற்கு பிரபாகரன் உயிருடன் உள்ளார் என தெரிவிக்கும் தரப்பினர் தாயாராகியுள்ளதாகவும் தெரியவருகின்றது. அதேநேரம் புலம்பெயர் தேசங்களில் புலிகளின் பணத்தில் வியாபார ஸ்தாபனங்களை நாடாத்துபவர்கள் பலர் தமது ஸ்தாபனங்களில் மாவீரர் தின சுவரொட்டிகளை ஒட்டுவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். அத்துடன் சுவரொட்டிகளை ஒட்ட அனுமதித்துள்ளளோர் அவற்றை முளங்காலுக்கு கீழே மக்களின் பார்வைக்கு தெரியாத இடங்களிலேயே ஒட்ட அனுமதித்துள்ளமையை அவதானிக்க முடிகின்றது.

1 comment:

  1. தேசிய தலைவருக்கு இதுவரைக்கும் ஒரு அஞ்சலியும் இல்லை. சிலையும் இல்லை. இதில் சந்தேகங்கள் நிறையவுண்டு.

    கொலைகளுக்கு காரணம் யார்,யார்? என்பது பிரான்சில் அதிகமாகவுள்ள சு..ப.. கூட்டத்திக்கு நன்கு தெரியும்.

    ReplyDelete