பாகிஸ்தானில் தீவிரவாதம் பெருகிவருகிறது: பர்வேஷ் முஷாரஃப்
பாகிஸ்தானின் சில பகுதிகளில் மக்கள் ஆதரவுடன் மதவாத தீவிரவாதம் பெருகி வருகிறது எனவும், அதனை கட்டுப்படுத்துவது கடினமானது என்றும் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரஃப் கூறியுள்ளார். நைஜீரிய நாட்டின் பொருளாதாரத் தலைநகர் லாகோஸில் ஆற்றிய உரையில், “பாகிஸ்தான் சில பகுதிகளில் தீவிரவாதம் அதிகரித்து வருகிறது. இதற்குக் காரணம் பாகிஸ்தானின் கிழக்கிலும் மேற்கிலும் மதவாதம் தழைத்து வருவதே” என்று பேசியுள்ள முஷாரஃப், “காஷ்மீரில் விடுதலை போராட்டம் நடக்கிறது, அது வளர்ந்து வருகிறது, இது பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்புகளுக்கு ஊக்கமளிக்கிறது. இவர்கள் அனைவருக்கு மக்கள் ஆதரவு கிடைக்கிறது” என்று கூறியுள்ளார்.
தெற்காசியாவில் அமைதி ஏற்பட வேண்டுமெனில், காஷ்மீர் பிரச்சனக்குத் தீர்வு காண வேண்டும், ஏனெனில் இரு நாடுகளிலும் தழைத்து வரும் தீவிரவாதத்தின் அடித்தளமாக காஷ்மீரே உள்ளது. எனவே இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் காஷ்மீர் பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும் என்று கூறியுள்ளார்.
பாகிஸ்தானில் சரக்கு விமானம் மோதி நொறுங்கியது 8 பேர் பலி
கராச்சியிலிருந்து சூடான் தலைநகர் கார்ட்டோம் நோக்கி புறப்பட்ட ரஷ்ய சரக்கு விமானம் புறப்பட்ட சில விணாடிகளிலேயெ கட்டிடம் ஒன்றில் மோதி நொறுங்கி, தீப்பிடித்து எறிந்தது. இதில் விமான ஊழியர்கள் 8 பேரும் பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
உயிரிழந்தவர்கள் ரஷ்ய ஊழியர்களாக இருக்கலாம் என்று தெரிகிறது. மேலும் 7 பேர் இதில் காயமடைந்துள்ளனர்.
யு.ஏ.இ.-யிலிருந்து புறப்பட்டு கராச்சி வழியாக சூடான் செல்லவிரும்த இந்த சரக்கு விமானம் கராச்சியிலிருந்து இன்று அதிகாலை 1.45 மணிக்கு விபத்துக்குள்ளானது.
விமானம் தீப் பிடித்தக்டால் அப்பகுதியே போர்க்களம் போல் காட்சியளித்தது. தீயணைப்புப் படையினர் தீயை போராடி அணைத்து வருகின்றனர்.
கடந்த ஒரு மாதத்திற்குள் கராச்சியில் ஏற்படும் இரண்டாவது விமான விபத்தாகும் இது.
0 comments :
Post a Comment