Tuesday, November 30, 2010

குற்றப் புலனாய்வுத் துறை பொறுப்பதிகாரிக்கான விளக்கமறியல் நீடிப்பு.

கிருலப்பனை பிரதேசத்தில் அமைந்திருந்த விடுதி ஒன்றில் கடமையாற்றிய இந்திய இளைஞர் ஒருவரை கொலை செய்தமை தொடர்பாக கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி சந்தண டி சில்வா மற்றும் கிருளபனை பகுதி உணவு விடுதி உரிமையாளர் இருவரையும் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஜூன் 27 ஆம் திகதி முந்தல் பள்ளிவாசல்பாடு கடற்கரைப் பகுதியில் இந்திய நாட்டு இளைஞரது சடலம் வீசப்பட்டதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட மேற்படி இருவரும் இன்று புத்தளம் மாவட்ட நீதிபதி எஸ்.பி.எச்.எம்.தேசறீ ஹேரத் முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டனர். வழக்கு விசாரணைகள் தொடர்பாக சட்டமா அதிபரின் அறிக்கை கிடைக்கவில்லை என பொலிஸார் மன்றுக்கு தெரியப்படுத்தினர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com