அமெரிக்காவில் கார்குண்டு வைக்க முயன்ற சோமாலிய இளைஞன் கைது
அமெரிக்காவின் ஓரிகன் மாகாணத்தில் கிறிஸ்தும்ஸ் பண்டிகையொட்டி மரம் அமைக்கும் வேலை நடைபெற்றுவந்தது. அவ்விடத்தில் வெடிகுண்டுகள் நிரம்பிய காரை நிறுத்தி வெடிக்கச் செய்ய முயன்ற முஸ்லிம் மாணவனை பொலீஸார் கைது செய்தனர்.
அமெரிக்காவின் ஒர்கன் மாகாணத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி அங்கு கிறிஸ்துமஸ் மரம் அமைக்கப்பட்டுள்ளது. அலங்கரிக்கப்பட்ட அந்த மரத்தில் மின்விளக்குகள் ஏற்றும் பிரமாண்ட நிகழ்ச்சி நேற்று முன்தினம் மாலை நடந்தது.
அப்போது அங்கு பதட்டத்துடன் ஒரு வாலிபர் சுற்றித்திரிந்தார். எனவே, அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார அந்த நபரை பிடித்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் அவனது பெயர் மொகமத் ஒஸ்மான் மொகமுத் (வயது19) எனவும் சோமாலியாவை பூர்வீகமாக கொண்டவர் எனவும் தெரியவந்தது. மேலும் அவர் ஒர்கான் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார். போலீசார் துருவி துருவி விசாரித்தனர்.
அப்போது கிறிஸ்துமஸ் மரம் அமைக்கப்பட்டிருந்த இடத்தின் அருகே வெடிகுண்டு நிரம்பிய கார் நிறுத்தப்பட்டிருந்தது. அந்த காரை செல்போனில் வடிவமைக்கப்பட்டிருந்த ரிமோட் கண்ரோல் மூலம் வெடிக்க செய்து பேரழிவை ஏற்படுத்த இருந்தது தெரிய வந்தது.
0 comments :
Post a Comment