Saturday, November 27, 2010

மாவீரர்கள் நினைவு கூரப்படவேண்டியவர்களே, ஆனால் விற்பனைக்குரியவர்கள் அல்ல.

ஈழத்தமிழ் மக்களின் உரிமைகளுக்கான போராட்டம் தொடங்கிய காலத்திலிருந்து பல உயிர்கள் தியாகங்கள் செய்து, வீரகாவியம் படைத்து எம்மை விட்டு துறந்தும் இன்றும் எத்தனையோ பெற்றோருக்கு தம் பிள்ளைகளின் உயிர் அகன்ற உடல்களை பார்க்கவோ... அவர்களின் நினைவு கல்லறை பார்க்கவோ கிடைக்காமல் தம் துயரை தம்மினுள்ளே அமிழ்த்தி... துயரும் வேளை, புலம் பெயர்ந்த நாடுகளிலோ பரநாட்டியம் பயிலும் தம் பிள்ளைகளின் நடனத்தை மேடையேற்றி பார்ப்பதற்கும்... ஓர் மாவீரர் திருவிழா...!!!

தாயகத்தில் பாடசாலைக்கு சென்ற பிள்ளை வீடு திரும்பாமல் விடுதலை என்னும் பிள்ளை பிடித்த கூட்டத்தால் கூட்டிச்சென்று வயிற்றில் குண்டை கட்டி குற்றுயிராக்கப்பட்ட வேளை... புலம் பெயர்ந்த நாடுகளிலோ பாடசாலை செல்லும் பிள்ளைகளை தவறான வழியில் வழிநடத்தி வளரும் சமுதாயத்தை மரமண்டையக்குவதர்க்கு... ஓர் மாவீரர் திருவிழா...!!!

தாயகத்தில் தாம் பெற்ற பிள்ளைகளின் சம்பாத்தியத்தை காணாமல்... தம் புருஷர்களின் சம்பாத்தியத்தை காணாமல்... பிள்ளைகளின் தாய்மார்... கணவனை இழந்த விதவைகள் துன்பத்திலும்... துயரத்திலும்... பாதுகாப்பில்லாமல்... ஏழ்மையில்... ஏங்கித் தவிக்கும்போது... புலம் பெயர்ந்த நாடுகளிலோ BMW... INFINITI... LEXUS... ஓடுவதற்கும் பட்டாடைகள் உடுத்துவதற்கும் மாவீரர் பெயரால் விழாவெடுத்து வருவாய் தேட... ஓர் மாவீரர் திருவிழா...!!!

மாவீரர்கள் நினைவு கூறப்படவேண்டியவர்களே, ஆனால் விற்பனைக்குரியவர்கள் அல்ல...!!!

புலம் பெயர் நாடுகளில் மாண்ட பினாமி வீரர்களே... 2008 மட்டும் மாவீரர் கணக்கு சொல்லி மாவீரர் திருவிழா எடுத்தவர்களே... 2009 இலிருந்து கணக்கு எங்கே...???

நாற்பதினாயிரத்திர்க்கு மேற்ப்பட்டவர்களை மாவீரர்களாக்கிய... நாற்பதினாயிரத்திர்க்கு மேற்ப்பட்ட குடும்பங்களை மாவீர குடும்பம் என்ற நாமத்தில் அழித்த... மகா மாவீர புருஷனிற்கு மாவீர் பட்டம் எங்கே...???

தன்னை மகா மாவீரனாக்காமல் தப்புவதற்கு நாற்பதினாயிரத்திர்க்கு மேற்ப்பட்ட அப்பாவி குழந்தை... கர்ப்பிணித் தாய்மார்கள்... முதியோர்...என்று கிளிநொச்சி தொடக்கம் முள்ளிவாய்க்கால் மட்டும் நாலாம் கட்ட போர் என்று பலி கொடுத்த... மகா மாவீர புருஷனிற்கு மாவீர் பட்டம் எங்கே...???

தன்னை சூரிய தேவனாக காட்டுவதற்கு பற்குணம், மைக்கேல் தொடக்கம் தோழர் சுபத்திரன், பாறுக் தோழர் வரை நாலாயிரத்திற்கு மேற்பட்ட மண்ணுக்காகவும்... மக்களுக்காகவும்... தம்மை அர்ப்பணித்த தோழர்கள் மட்டுமல்லாமல்... சகோதரி ரஜனி தினரகம, செல்வி தொடக்கம் சரோஜினி யோகேஸ்வரன், மகேஸ்வரி வரை எமது தாய் நாட்டின் தாய்க் குலத்தை பலி எடுத்த... மகா மாவீர புருஷனிற்கு மாவீர் பட்டம் எங்கே...???

மண்ணை மீட்கும் போர்... தாயக விடுதலைக்கான போர் என்று தன்னை தானைத் தலைவனாக நிலை நிறுத்தி... மண்ணுக்காகவும்... மக்களுக்காகவும்... தம்மை அர்ப்பணித்தவர்களின் நாமத்தால் மாவீர் உரை என்று ஓர் உரை வாசிக்கும்... மகா மாவீர புருஷனிற்கு மாவீர் பட்டம் எங்கே...???

நாலு பேர் என்று தொடக்கி... நாற்பது பேராக பண்ணையில் பயிற்சியெடுத்து... நாலாயிரம் பேராக அந்நிய மண்ணில் பயிற்சியெடுத்து... நாற்பதினாயிரம் பேரை மாவீரராக்கி... மேலும் நாற்பதினாயிரம் பேரை நாற்பது நாட்களில்... தான் சயனைட் விழுங்காமல் தன் உயிரை காப்பற்றுவதற்க்காக பலி கொடுத்து... நாலு இலட்சம் பேரை தம் மண்ணிலேயே உடுத்த உடைகளுடன் முள்ளுக்கம்பிகளுக்குள் அகதிகளாக்கி... எண்ணிலடங்காத ஆயிரக்கானவர்களை அங்கவீனர்களாகி... குழந்தைகளை அனாதைகளாக்கி... தாய்மாரை விதைவைகளாக்கி... தன் குடும்பத்தையே... தன் குடும்பத்தின் மனைவி பிள்ளைகள் நாலு பேரையும் காப்பாற்றமுடியாமல்... பலி கொடுத்த... மகா மாவீர புருஷனிற்கு மாவீர் பட்டம் எங்கே...???

மாவீரர் திருவிழா நடாத்தும் மாவீர மானிடர்களே...??? மகா மாவீர புருஷனிற்கு மாவீர் பட்டம் எங்கே...???

மண்ணுக்காகவும்... மக்களுக்காகவும்... தம்மை அர்ப்பணித்த தோழர்கள்... தியாகிகளாகட்டும்... வீர மக்களாகட்டும்... எழிமைக்கும்... உறுதிக்கும் இலக்கணமாக இருந்து அரசு இராணுவ இயந்திரத்தால் படுகொலை செய்யப்பட்ட தோழர் கனகுலசிங்கம் தொடக்கம்... வீர வணக்க பட்டியலிடாமல் இன்றும் காந்தியம், வங்கம் தந்த பாடம் மூலம் வாழ்ந்து கொண்டிருக்கும் தோழர் சந்ததியார் மட்டுமல்லாமல்... இனவெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட டாக்டர் இராஜசுந்தரம், அரபாத்... என்று முகம் தெரியாமல் மண்ணுக்காகவும்... மக்களுக்காகவும்... தம்மை அர்ப்பணித்த... பட்டியல்களில் அடங்காத அனைவரும் தியாகிகளே...! வீரமறவர்களே...!! மாவீரர்களே...!!!

என்று எம்மண்ணில் மரணித்தவர்கள் அனைவருக்கும் ஒருமித்து பாகுபாடில்லாமல் நினைவுகூறுகிறோமோ, அன்றுதான் எம்மை ஓர் இனம் என்று இலங்கை அரசு தொடக்கம்... உலக இன மக்கள் வரை அங்கீகரிப்பார்கள்...!!!

மாவீரர் திருவிழா நடாத்தும் மாவீர மானிடர்களே...!!!

உங்களால்... உங்களின் தீர்க்கதரிசனமில்லாத போராட்டத்தால்... மண்ணுக்காகவும்... மக்களுக்காகவும்... தம்மை அர்ப்பணித்த/ தங்களால் படுகொலை செய்யப்பட்ட சக போராளிகளை... அரசியல்வாதிகளை... நினைவுகூர பக்குவப்படுங்கள்...!!!

மாவீரர் திருவிழா நடாத்தும் மாவீர மானிடர்களே...!!!

உங்களால்... உங்களின் தீர்க்கதரிசனமில்லாத போராட்டத்தால்... மண்ணுக்காகவும்... மக்களுக்காகவும்... தம்மை அர்ப்பணித்த மாவீரர் குடும்பங்களிற்கு உதவிகளை செய்யுங்கள்...!!!

இனியொரு விதிசெய்வோம்...! என்று இனியும் நீங்கள் திருந்தாவிடில், நீங்கள் மானிடர்களே அல்ல...!! திருந்துங்கள்...!!!


மாவீரர்களை விற்காதீர்கள்...!
விற்பனர்களே...!! மாவீரர்களை விற்காதீர்கள்...!!!

- அலெக்ஸ் இரவி

1 comments :

Gobi November 29, 2010 at 1:23 PM  

When I see people like you, especially tamil, who take the money from the singhalese to betray their own origin, culture it makes me sick. People like you dont have the right, trust me, not even one percent, to talk about our maaveerar. The 27th Novemeber is the rememberance day of our maaveerar, where we show our respects towards them. When you try to abuse that by saying that our tamil people do their dance performance in order to show off, then you are so pathetic. Doing something for our maaveerar is in order to respect them.
Second of all, what are you telling me about the issue in sri lanka? Kids who get abducted?!? oh, let me think. What happens now? No LTTE "according to your singhala Government". Who abduct the people now?!? Why do we find them dead on the street?!? You are telling me about single mothers, litte girls who suffere without their families?!? Why don't you write about the SL armies who take out every girls for every night?
Listen, if I start writing about these issues it's going to last for days. I am so ashamed of you people, calling themselves an author and writing all the rubbish in the web. I know it's just waste of my own time to write this comment, even thoguh it's not going to get published. You Mr Alex Ravi, will, even if you have now plenty of money and live in a luxury life, will end up in the hell with a lot of suffering as you carry the burden of so many people suffer. Yuo don't have even a little feelin of doing something wrong against your own tamil society, right?!? People like you are the reason why our tamil people did not get their victim many centuries ago.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com