பீமனின் சவாலை ஏற்றுக்கொண்டார் ஜெயானந்தமூர்த்தி.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தி, பிமனின் சவாலை எற்றுக்கொண்டுள்ளார். ஜெயானந்தமூர்த்தி லண்டனில் குடிபுகுந்த புலிப்புராணம் பாடிக்கொண்டிருப்பதை விடுத்து, முதலில் மட்டக்களப்பு மக்களின் வாக்குகளால் அவருக்கு மாதந்தம் கிடைக்கும் ஓய்வுதியத்தை மாவட்டத்திலுள்ள விதவைகளுக்கு பகிர்ந்தளிக்க தயாரா என கடந்த 30.04.2010 திகதி பீமன் எழுதி கட்டுரையில் சாவல் விடுத்திருந்தார். (கட்டுரையை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்) பீமனின் சவாலை ஏற்றுக்கொண்டுள்ள அவர் தனது ஓய்வூதியப் பணத்தை புலிகள் இயக்கத்திலிருந்து மரணத்த குடும்பத்தினருக்கு வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்: நல்ல விடயம்.
ஆனால் இங்கு ஜெயானந்தமூர்த்தி எதற்காக மரணித்த புலிகளின் குடும்பத்தினருக்கு அப்பணத்தினை வழங்கவேண்டும். மரணித்த புலிகளின் குடும்பத்தினரின் நலன்களை கவனிக்கவேண்டியது எஞ்சியுள்ள புலிகளது கடமை. புலம்பெயர் தேசத்திலே புலிகளின் கோடிக்கணத்கான பணம் எஞ்சியுள்ளது. அவர்கள் அப்பணத்தினை மரணித்த புலிகளின் குடும்பத்தினருக்கு வழங்கமுடியும். அதற்கு மேலாக கே.பி பல கப்பல்கள் சொத்துக்களுடன் இலங்கையில் உள்ளார். அவரும் அச்சொத்துக்களை விற்று மரணித்த புலிகளுக்கு வழங்க முடியும்.
எனவே ஜெயானந்தமூர்த்தி தனது ஓய்வூதியத்தை இவ்யுத்தத்திலே பாதிக்கப்பட்டு பொதுமக்களின் குடும்பத்தினருக்கே வழங்கவேண்டும். அன்றில் ஜெயானந்தமூர்த்தி அர்ப்ப லாபத்திற்காகவும் பிரச்சாரத்திற்காவுமே இச்செயலை செய்துள்ளார் என கருதமுடியும்.
0 comments :
Post a Comment