Wednesday, November 17, 2010

இலங்கைக்கு தீங்கிழைத்த நாடு நோர்வே. Gomin Dayasiri

இலங்கைக்கு தீங்கிழைத்த நாடு நோர்வே- புலிகள் அமைப்பினை எப்போதும் எவராலும் வெல்லமுடியாது எனத் தவறாகக் கணித்தவர்தான் இந்த சொல்கெயம் என கொழும்பு ஊடகம் ஒன்றின் பிரதான எழுத்தாளர்களில் ஒருவரான Gomin Dayasiri குறிப்பிட்டுள்ளார். அவரது நீண்ட கட்டுரையில் நோர்வேயினை விட உலகின் எந்த நாடும் இலங்கைக்கு இவ்வாறு தீங்கிழைக்கவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தங்களிலிருந்து தூரத்தேயிருக்கும் இலங்கைத் தீவில் தாங்கள் வகிக்கவேண்டிய பங்கு என்னவென அறிவில்லாத இந்தக் ஸ்கன்டினேவியர்களுக்குச் சரியாகத் தெரியவில்லை.

தற்போது இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் எம்கண்முன்னே விரியும் நிகழ்வுகள் தொடர்பாக தமக்கேயுரிய பாணியில் நோர்வேஜியர்கள் அதிகம் அலட்டிக்கொள்வதாகத் தெரியவில்லை.
மக்களையல்ல அந்த நாட்டு அரசியல்வாதிகளைத்தான் நாங்கள் இதற்குக் குறைகூறவேண்டும்.

இவ்வாறு கொழும்பில் இருந்து வெளியாகும் (டெயிலி மிரர்) ஆங்கில ஊடகத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவின் எண்ணப்போக்கை வெளிப்படுத்தும் இக்கருத்தை அனைத்துலக அளவிலான கௌரவத்தினைப் பெறும் வகையிலேயே அவர்களது நடவடிக்கைகள் அமைந்திருக்கின்றன.

இந்த ஸ்கண்டிநேவிய ஏற்பாட்டாளர்களுக்கு ஆசியாவினைப் பற்றியோ அன்றி தென்னாசியப்பிராந்தியத்தின் இயல்புநிலை தொடர்பாகவோ அன்றி இலங்கைக்கு தீங்கிழைத்த நாடு நோர்வே சேர்ந்தவர்களின் மனநிலை தொடர்பாகவோ எதுவும் தெரியாது. புலிகள் என்ற அரியத்தின் ஊடாகவே நோர்வேயியர்கள் இலங்கை நிலைமைகளை அவதானித்தார்கள்.

ஆரம்பத்தில் புலிகளின் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் ஐரோப்பாவிற்குச் சென்று சிறுநீரக மாற்று அறுவைச்சிகிச்சையினைப் பெறுவதற்கு நோர்வே துணைபுரிந்திருந்தது.

பின்னர் குறுகிய பார்வையுடன் புலிகளமைப்பின் நலன் தொடர்பாகவே சதா சிந்தித்தவாறு அவர்களது செய்நன்றியறிதல் மற்றும் நல்லொழுக்கம் தொடர்பான புகழ்பாடிக்கொண்டு நோர்வே ஏற்பாட்டாளராக களத்தில் இறங்கியது.

புலிகளிகளின் இடைக்கால தன்னாட்சி அதிகாரசபையின் கீழ் அதன் பிரதான மத்தியஸ்தராக நோர்வே மாறியது.

நோர்வே ஏற்பாட்டாளர்கள் பாகுபாட்டுடனும் வெளிப்படைத்தன்மை எதுவும் இன்றியும் தங்களது ஏற்பாட்டுப் பணியினைச் இலங்கைக்கு முன்னெடுத்திருந்தனர்.

நோர்வே நாட்டினது சோசலிச இடதுசாரிக் கட்சியின் நிரந்தர உறுப்பினரான எரிக்சொல்கெய்ம் புலிகளின் விருப்பத்துக்குரியவராக விளங்கினார்.

இலங்கைக்கு கான சிறப்புத் தூதுவராக சொல்கெய்ம்தான் எப்போதும் இருக்வேண்டும் என புலிகள் விரும்புமளவிற்கு இவர்களுக்கிடையிலான உறவுநிலை தொடர்ந்தது.

புலிகளும் எரிக் சொல்கெய்மும் ஒரே எண்ணப்போக்கையே கொண்டிருந்தனர்.

இடம்பெற்ற இறுதிக்கட்டப் போர் முன்னெடுக்கப்பட்ட முறை தொடர்பாக ஐ.நா விசாரணைகளை முடுக்கிவிடவேண்டும் என போரின் முடிவு தொடர்பில் கசப்புற்றிருந்த சொல்கெய்ம் நோர்வே நாட்டினது ஒப்தன்போஸ்ரன் என்ற பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டிருந்தார்.

அரச படைகளில் குறிப்பிட்ட சில பகுதியினர் கொலைகளில் ஈடுபட்டிருப்பதற்கான ஆதாரங்கள் அதிகமுள்ளதாக சொல்கெய்ம் குறிப்பிட்டிருந்தார்.

புலிகளைப் போலவே இலங்கை அரசாங்கமும் மோசமான செயற்பாடுகளில் ஈடுபட்டிருக்கிறது என பி.பி.சியினது கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்தபோது அவர் தெரிவித்தார்.

இலங்கைல் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்காக பான் கீ மூன் அமைத்திருந்த வல்லுநர்கள் குழுவினை சொல்கெய்ம் வெளிப்படையாகவே வரவேற்றுக் கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

பொன்சேகாவினது வெள்ளைக்கொடி விவகாரத்தினைப் போல மிகவும் மோசமான உண்மைக்குப் புறம்பானதொரு குற்றச்சாட்டையே சொல்கெய்ம் இங்கு முன்வைக்கிறார்.

முட்டாள்தனமான செயற்பாடுகளில் ஈடுபடும் ஓர் அரசியலாளனாக மாறுவதற்கு முன்னர் போரை வென்றுகொடுப்பதற்கு இந்த நாட்டுக்குப் பொன்சேகா அளப்பரிய சேவையினை ஆற்றியிருந்தார்.

போரை வென்றுதந்த பொன்சேகா சிறையில் வாடும் அதேநேரம் எப்போதும் இலங்கைக்கு எதிராகவே செயற்பட்ட சொல்கெய்மிற்கு நாட்டினது கௌரவ விருந்தாளியாக நாங்கள் சிவப்புக் கம்பளம் விரிக்கிறோம்.

புலிகள் அமைப்பினை எப்போதும் எவராலும் வெல்லமுடியாது எனத் தவறாகக் கணித்தவர்தான் இந்த சொல்கெயம்.புலிகள் தோற்கடிக்கப்படுவதென்பது நினைத்துப் பார்க்கவே முடியாதது எனச் சொல்கெய்ம் கருதினார்.

ஆனால் புலிகளமைப்பின் தோல்வி தவிர்க்கமுடியாததாக மாறியிருந்தது. போர்நிறுத்த ஒப்பந்தம் என்ற புனைகதையின் உருவாக்கத்திற்குக் காரணமாக இருந்ததன் ஊடாக சொல்கெய்ம் வாழ்நாள் தவறிழைத்துவிட்டார். இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தத்தினால் நாங்கள் இழந்தது அதிகம்.

ஐக்கிய நாடுகள் சபையில் வைத்து அதிபர் ராஜபக்சவினைச் சந்திக்கும் சந்தர்ப்பம் அண்மையில் எரிக் சொல்கெய்மிற்குக் கிடைத்தது. அதேநேரம் ஒஸ்லோவிற்குப் பயணம் செய்த ரணில் விக்கிரமசிங்கவையும் எரிக் சந்தித்து உரையாடியிருக்கிறார்.

இருநாடுகளுக்குமிடையிலான பணிசார் கால அட்டவணை ஒன்றைத் தயாரிப்பதற்கே சொல்கெய்ம் கொழும்பு வருகிறார் என சந்திரிகாவினது ஆட்சிக்கலத்தின் போது சொல்கெய்மின் நெருங்கிய சகாவாகச் செயற்பட்டவரும் போர் நிறுத்த ஒப்பந்த காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் அமைதி முயற்சிகளில் கலந்துகொண்டவருமான வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் கூறுகிறார்.

சீநோர், வேல்ட் வியூ, ரெட் பார்னா மற்றும் நோர்வேஜிய அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் போன்ற தொண்டு நிறுவனங்களுக்கு நோர்வே நிதியுதவிகளை வழங்கிவருகிறது.

உத்தமமான இராசதந்திரம் என்றால் என்ன என்பதை நோர்வே சரியாக விளங்கிக்கொண்டிருக்குமாயின் சிறிலங்காவினது விடயத்தில் சொல்கெய்மை மீண்டும் அது ஈடுபடுத்தக்கூடாது. இந்த முடிவு இலங்கைக்கு நோர்வே முன்னெடுக்கும் புனர்வாழ்வு முயற்சிகளை பாழாக்குவதாகவே அமையும்.

பின்நாட்களில் நோர்வேயின் சிறப்புத் தூதுவராக நியமிக்கப்பட்டிருந்த ஜோன் ஹான்சன் பவர் புலிகள் தொடர்பில் வளைந்து கொடுக்காததொரு நிலைப்பாட்டையே கொண்டிருந்தார்.

ஒப்பந்தம் நடைமுறையில் இருந்தபோது தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் அதனை அவர் வெளிப்படையாகச் சுட்டிக்காட்டினார். ஆனால் சொல்கெய்மோ புலிகள் தொடர்பில் அதிக பரிவுடனும் விட்டுக்கொடுப்புடனுமே எப்போதும் செயலாற்றிவந்தார்.

புலிகள் அமைப்புக்குச் சொல்கெய்ம் வழங்கிநின்ற கட்டுக்கடங்காத ஆதரவின் விளைவாக கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்த ஆயிரக்கணக்கானவர்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் நாம் சொல்கெய்மை வரவேற்காது நிராகரிக்கவேண்டும்.

இல்லையேல் சொல்கெய்மினது முறைதவறிய முடிவுகளின் விளைவாகக் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் படைவீரர்களுக்கு நிந்தனை செய்வதாகவே இது அமையும்.

போருக்குப் பின்னர் சொல்கெய்ம் தெரிவித்த இலங்கைக்கு எதிரான மோசமான கருத்துக்களையும் நாம் மறக்கமுடியாது. இந்த நிலையில் சொல்கெய்மிற்குச் சிவப்புக் கம்பளம் விரிக்க முனையும் இலங்கை அரசியல்வாதிகளிடம் சுயமரியாதை என்ற ஒன்று இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விருந்தினர் பட்டியலில் சொல்கெய்மினது பெயரும் இடம்பிடிக்குமிடத்து அது அரசாங்கம் தேவையற்ற அவப்பெயரைச் சுமப்பதற்கே வழிசெய்யும்.

போர் மூர்க்கமாக இடம்பெற்ற இறுதிநாட்களில் கொழும்புக்கான பயணத்தினை மேற்கொள்வதற்குச் நோர்வே நாட்டவர்கள் பகீரதப்பிரயத்தனத்தினை மேற்கொண்டபோதும் அதிபர் ராஜபக்ச இவர்களது கொழும்புக்கான உத்தியோகபூர்வ பயணங்கள் இடம்பெறாமலிருப்பதை உறுதிப்படுத்தியிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

சொல்கெய்மினது முட்டாள்தனமான செயல்களுக்கு வைக்கிங்களுக்கு பாடம் புகட்டவேண்டியது அவசியமாயிற்று. தாங்கள் இழைத்த தவறுக்கான பரிகாரத்தினை நோர்வே செய்யத்தான் வேண்டும்.

மன்னிக்கவும், இந்தப் பரிகாரம் வெறும் சொற்களிலல்ல, குரோனர்களாலானதாக இருக்கவேண்டும் [குரோனர் என்பது நோர்வே நாட்டினது நாணயம்].

சனநாயகம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான சர்வதேசச் சட்ட நியமங்களின்படி நோர்வே ஒழுகியிருக்குமாக இருந்தால் அது இதுபோன்றதொரு நிலை ஏற்படுவதைத் தவிர்த்திருக்கலாம். ஆனால் சிறிலங்காவினது விடயத்தில் நோர்வே அவ்வாறு செயற்படவில்லையே.

போர்நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையிலிருந்த காலப்பகுதியில் நோர்வேஜியர்கள் இரட்டைப் போக்குடன்கூடிய அணுகுமுறையினையே கையாண்டார்கள்.

சொல்கெய்மினது முழுப் பொறுப்பின் கீழிருந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாகப் புலிகள் மாற்றப்பட்டிருந்தார்கள்.

நாட்டினது ஏனைய தமிழ் கட்சிகள் ஒதுக்கி ஓரங்கட்டபட, தமிழ்மக்களைக் கட்டுப்படுத்துவதற்காக முழு அதிகாரத்தையும் புலிகள் தமதாக்கினர்.

ஈற்றில் நோபல் பரிசினைத் தனது நெற்றியில் சுமக்கும் ஒரு நாடு பயங்கரவாத அமைப்பொன்று சட்டபூர்வமானதாக மாறுவதற்கு துணைபோனது. போர் நிறுத்த ஒப்பந்தமானது புலிகள் அமைப்பு மீதிருந்த தடையினை இல்லாது செய்தது.

இதன் விளைவாக திருகோணமலைத் துறைமுகத்தினைச் சூழவுள்ள பகுதிகளிலும் கூட புலிகள் தங்களது இராசதானியினைப் பலப்படுத்துவதற்கு வழிசெய்தது.

இலங்கைத் தீவினது நிலப்பகுதிகள் அரச கட்டுப்பாட்டுப் பகுதி என்றும் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதி என்றும் அழைக்கப்படுவதற்கு வழிவகுத்ததும் இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தம்தான்.

குறிப்பிட்ட இந்த நிலப்பகுதியினை, தங்களது நடைமுறையதார்த்தக் கட்டமைப்புக்களுடன் புலிகள் நீண்டநாட்களுக்குக் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தால் இதுதான் தங்களின் தேசம் என அவர்கள் வாதிட்டிருப்பர்.

போர் நிறுத்த ஒப்பந்தத்தின் பிரகாரம் புலிகள் அல்லாத ஏனைய தமிழ் ஆயுதக் குழுக்களிடமிருந்த ஆயுத தளபாடங்கள் அனைத்தும் களையப்பட்டன. மனித உரிமைகள் மற்றும் சனநாயகப் பண்புகள் என்பன மதித்துச் செயற்படாத அதேநேரம் மாற்றுக் கருத்துடையவர்களை அடக்கும் போக்கினையும் கைக்கொண்ட புலிகள் தங்களது கட்டுப்பாட்டின் கீழிருந்த பகுதிகளில் பயங்கரவாத ஆட்சியினை நடாத்துவதற்கு போர் நிறுத்தம் வழிவகுத்தது.

போர் நிறுத்த ஒப்பந்தத்தன் கீழ் புலிகள் தவிர்ந்த ஏனைய எந்த அரசியல் கட்சியும் வடக்கு மற்றும்க கிழக்குப் பகுதியில் செயற்படுவதற்கு அனுமதிக்கப்படவில்லை.

வடக்குக் கிழக்குப் பிராந்தியங்களில் புலிகள் தங்களது அரசியல் அலுவலகங்களைத் திறப்பதற்கு இது வழிவகுத்தது.

துன்பத்திலிருக்கும் சிறார்களை அரவணைக்கும் பண்பினைத் தாங்கள் கொண்டிருப்பதாகச் சர்வதேச ரீதியில் காட்ட முனையும் நோர்வே புலிகள் சிறார்களை படையில் இணைத்தமைக்கு எதிராக நடவடிக்கை எதனையும் எடுக்கத் தவறிவிட்டது.

போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு அமைய யாழ்-கண்டி நெடுஞ்சாலை திறக்கப்பட்டமையானது புலிகள் தங்களது கட்டுப்பாட்டுப் பகுதியினைக் கடந்து எடுத்துச்செல்லப்படும் பொருட்களுக்கு அதியுயர் வரிகளை விதிப்பதற்கும் குடாநாட்டிலிருந்து சிறார் போராளிகளைப் புலிகள் பெருமளவில் வன்னிக்குக் கொண்டுவருவதற்கும் வழிவகுத்தது.

இரண்டு தரப்பிற்கும் இடையிலான அமைதிவழிப் பேச்சுக்கள் எவ்வாறு இடம்பெறவேண்டும் என்ற எந்த வரையறையினையும் போர் நிறுத்த ஒப்பந்தம் கொண்டிருக்கவில்லை.

நாட்டினது வடக்குக் கிழக்குப் பகுதியில் இதர சனநாயக சக்திகள் செயற்படுவதற்கான அனைத்து வழிகளையும் அடைத்திருந்த போர்நிறுத்த ஒப்பந்தம் புலிகள் தெற்கிலும் செயற்படுவதற்கு ஏற்ற வசதிகளைத் தன்னகத்தே கொண்டிருந்தது.

இதுபோன்றதொரு நிலைமை ஏற்பட்டமைக்கு நோர்வேதான் காரணம். இலங்கைல் தற்போது நிலவும் உண்மையான அமைதியினைச் சொல்கெய்ம் சுவாசிக்கவேண்டுமெனில் அவர் சாதாரண ஒருவர் போல உல்லாசப் பயணிகளுக்கான பயண அனுமதிக்கு விண்ணப்பிக்கலாம்.

கொழும்பிலுள்ள நோர்வேஜிய தூதரகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு எரிக் சொல்கெய்மினது கொடும்பாவியினையும் எரித்தவர்கள் யாரோ அவர்கள் தற்போது அமைச்சரவையின் முக்கிய நிலைகளில் உள்ளார்கள்.

இந்த நிலையில் சொல்கெய்ம் கொழும்புக்கான தனது உத்தியோகபூர்வ பயணத்தினை மேற்கொள்வதற்கான எதிர்ப்புப் போராட்டத்தினை இவர்கள் மேற்கொள்வார்களா?

1 comments :

Anonymous ,  November 18, 2010 at 3:49 PM  

Norway and their SLMMM should take full responsible to the whole heavy losts and sufferings of the innocent people.

SLMM was created to protect LTTE and help LTTE terrorism only.

With the help of Norway the LTTE could established their power and their international activities without any barrier.

Eric Solheim was the man of the LTTE's plans and plots.

He is unforgetable man.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com