Thursday, November 18, 2010

புலிகளின் ஊடகவியலாளர் ஒருவர் கொழும்பில் மாயம்.

லண்டனிலிருந்து தீபம், ஐபிசி ஆகிய புலி ஊதுகுழல்களுக்காக பணிபுரிந்துவந்த திருலோகச் சுந்தர் என்பவர் கொழும்பில் மாயமாகியுள்ளதாக தெரியவருகின்றது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொழும்பு சென்றிருந்த இவர் புலிகளின் முன்னாள் உறுப்பினர் எனவும் இவரது இயக்கப்பெயர் நிரோசன் எனவும் எமது லண்டன் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

சங்கமம் வானொலியின் உரிமையாளரான இவர் ஈரிபிசி வானொலியின் பங்குதாரர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். புலிகளின் கஸ்ரோ பிரிவின் புலனாய்வாளனான இவர் ஊடகத்துறையினை தனது தகவல்சேகரிப்புக்கு பயன்படுத்துவதாகவும் குறிப்பிட்ட நோக்கத்திற்காகவே அவர் கொழும்பு சென்றதாகவும் லண்டன் ஊடகவியலாளர் ஒருவர் குற்றஞ்சுமத்துகின்றார்.

கொழும்பில் குற்றப்புலனாய்வுத் துறையினரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக நம்பப்படுகின்றது. புலிசார்பு ஊடகங்களிடையே காணப்படும் விளம்பரப் போட்டிகள் காரணமாக இவர் பிரபல புலிஆதரவு தமிழ் ஊடகம் ஒன்றின் உரிமையாளரால் காட்டிக்கொடுக்கப்பட்டதாக தெரியவருகின்றது.

1 comments :

Anonymous ,  November 19, 2010 at 11:44 AM  

he came out now.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com