தமிழ் சமூகம் முன்னாள் புலிகளை தள்ளி வைக்கிறது. தயா மாஸ்ரர் முறைப்பாடு.
அரசினால் புனரருத்தானம் வழங்கப்பட்டு வீடுவிக்கப்பட்டுள்ள முன்னாள் புலிகளை தமிழ் சமூகம் ஏற்றுக்கொள்ளாத நிலை காணப்படுவதாகவும் இதற்கு அரசாங்கம் தீர்வொன்றினைப் பெற்றுத்தவேண்டும் எனவும் ஊர்காவற்துறையில் கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் நேற்று சாட்சியம் அளித்த புலிகளின் முன்னாள் ஊடக ,ணைப்பாளர் தயா மாஸ்ரர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்துடன் யுத்தம் உக்கிரமடைந்த போது யுத்தநிறுத்தம் ஒன்றிற்கு செல்லுமாறு கோரி புலிகளின் மூத்த போராளிகள், புத்திஜீவிகள், பொதுமக்கள் என பலரும் ,ணைந்து புலிகளின் தலைமைக்கு மகஜர் ஒன்றை சமர்ப்பித்ததாகவும் எனினும் அதற்கு தலமையிடம் ,ருந்து பதில் கிடைக்கவில்லை எனவும் தயா மாஸ்ரர் தெரிவித்துள்ளார். பாலகுமாரன் ஊடாக சமர்ப்பிக்கப்பட்ட அந்த மகஜரில் யுத்தம் உக்கிரமடைந்தால் பொதுமக்கள் தரப்பில் பாரிய உயிர் சேதங்கள் ஏற்படும் என சுட்டிக் காட்டப்பட்டதாகவும் கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment