ஆங் சான் சூகியின் விடுதலை சரத் பொன்சேகாவின் விடுதலைக்கு வழிகாட்டும்
மியன்மாரில் நோபல் பரிசினை பெற்ற ஆங் சான் சூகி விடுதலை செய்யப்பட்டது ஜனநாயகத்தை விரும்புகின்ற உலக மக்களுக்கு கிடைத்த வெற்றி என எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மேலும், 15 வருடங்களின் பின்னர் ஆங் சான் சூகி விடுதலை செய்யப்பட்டமை, இராணுவ அரசிற்கு எதிரான ஜனநாயகத்திற்கு கிடைத்த ஒரு வெற்றி என கருதலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஆங் சான் சூகியின் விடுதலையானது, இலங்கைத் தலைவர்களுக்கு சரத் பொன்சேகாவின் விடுதலை தொடர்பில் தீர்மானம் எடுக்க உதவியாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment