Sunday, November 7, 2010

அரசாங்கம் தமிழ் மக்களை இரண்டாம் தர பிரஜைகளாக நோக்குகிறதா? சித்தார்த்தன்

அரச தொழில்துறைகளில் தமிழ்பேசும் மக்களுக்கு தற்போது இழைக்கப்படும் அநீதிகள், பாரபட்சத் தன்மைகள் என்பன விரக்தி மனப்பான்மையுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் மக்களை இந்நாட்டின் இரண்டாம் தரப் பிரஜைகளாகவே அரசாங்கம் நோக்குகிறது என்பதையே காட்டுகின்றன. இதனை அரசாங்கமே உறுதிப்படுத்துவது போன்றே உள்ளது என புளொட் தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். அது மட்டுமன்றி, இந்நாட்டில் நல்லிணக்கம் உருவாகக் கூடாது என்ற நோக்கில்தான் அரசு செயற்படுகிறதா என்ற கேள்வியையும் இந்த செயற்பாடுகள் எழுப்புகின்றன. அரசாங்கத்தின் இந்தப் புறக்கணிப்பு நடவடிக்கைகளை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். எமது எதிர்ப்பையும் வெளிப்படுத்துகிறோம். அதுமட்டுமல்ல, யுத்தத்தை வெற்றி கொண்ட மனோபாவத்தில் மமதையில்தான் அரசாங்கம் இவ்வாறெல்லாம் செயற்படுவதாகத் தமிழ்மக்கள் இன்று நினைக்கத் தொடங்கியுள்ளனர். தமிழ்மக்கள் தாம் இந்நாட்டின் ஒரு பிரிவினர் அல்லர் என்பதனை அரசாங்கமே அந்த மக்களுக்கு இன்று உணர்த்தியுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com