Tuesday, November 2, 2010

கனடாவில் இலங்கையர் ​கௌரவத்திற்காய் கொலை முயற்சி.

கனடா வாழ் இலங்கையர் ஒருவர் அவரது மகள், மகளின் காதலன் மற்றும் மருமகனும் ஆகியயோர் ஒன்றாக சென்று கொண்டிருந்தவேளை வாகனத்தினால் மோதி கொலை செய்ய முற்பட்டுள்ளார் கனடா சட்டத்தரணி ஒருவர் நேற்றைய தினம் கூறியுள்ளார்.

குறித்த இலங்கையர் குற்றத்தை ஒப்புக் கொண்டதன் மூலம் கனடிய அரச தரப்பு வழக்கறிஞர் குறித்த நபருக்கு 6 வருட சிறைத்தண்டனை வழங்க வேண்டும் என்று நீதிமன்றில் கேட்டுக் கொண்டுள்ளார். நேற்றைய தினம் இடம்பெற்ற வழக்கு விசாரணை போதே அவர் இவ்வாறு கேட்டுக் கொண்டுள்ளார். 2007 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1 ஆம் திகதி இந்த கொலை முயற்சி இடம்பெற்றுள்ளது.

குறிப்பிட்ட இலங்கையர், அவரது மகளது காதலன் இலங்கை கீழ் நிலைச் ஜாதியை சேர்ந்தவர் என்பதால், திருமணத்திற்கு மறுத்ததாகவும் பின்பொரு நாள் வீதியில் இவர்களை கண்ட போது அவர் கொலை செய்ய முயற்சித்துள்ளதாக அரச தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த இலங்கையர் தனது மகளிற்கு அக்காலகட்டத்தில் 16 எயது என்பதனையும் , மகளின் காதலனிற்கு 18 வயது என்பதனையும் கூறியும், மகளினை காதலினிடமும் அவரது நண்பர்களிடமுமிருந்து பாதுகாக்க முற்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை தான் ஜாதி பார்க்க வில்லை எனவும் கூறியுள்ளார்.

இந்நிலையில் குறித்த இலங்கையரது மூத்த மகள் பொது உறவுமுறைச் சட்டத்தின் கீழ் 2006 ஆம் ஆண்டு காதலித்து காதலுடன் சென்று வாழ்வதனால், குற்றஞ்சாட்டப்பட்ட இலங்கையர் அந்த மன உலைச்சலின் காரணமாக கூட இவ்வாறு நடந்து கொண்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டதாக டொரன்டோ சன் அறிக்கை தெரிவிக்கின்றது.

1 comment:

  1. கனடாவிலும் தமிழருக்கு ஒரு கௌரவமா?
    எல்லாமே அவர்களின் குறிகிய தமிழ் வட்டத்துக்குள் தான்.

    ReplyDelete