60 அமைச்சர்களும் , 31 பிரதி அமைச்சர்களும் பதவியேற்றனர்.
இலங்கை ஜனநாயக குடியரசின் புதிய அமைச்சர்கள் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முன்னிலையில் பதவியேற்றுள்ளனர். மொத்தமாக 60 அமைச்சர்கள். இவர்களில் 10 அமைச்சர்கள் சிரேஸ்ட அமைச்சர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அமைச்சரவையின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 31 பிரதி அமைச்சர்கள். 59 அமைச்சர்கள் என அறிவிக்கப்பட்டிருந்தபோதும் சில மணித்தியாலங்களில் அமைச்சரவையின் எண்ணிக்கை 60 ஆகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 60 வது அமைச்சராக பிரியங்கர ஜயரட்ன சற்று நேரத்திற்கு முன்னர் அமைச்சரவை அந்தஸ்துள்ள சிவில் விமான சேவைகள் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் ஊடகங்கள் தெரிவித்திருந்த ஊகங்களுக்கு பலத்த அடிவிழுந்துள்ளது. பா.உ நாமல் ராஜபக்ச, சிறிறங்கா போன்றோர் இன்று அமைச்சர்களாக பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவில்ல.
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் ஆகியவற்றிலிருந்து அரசின் பக்கம் தாவியோரும் அமைச்சர்களாக நியமனம் பெற்றுள்ளனர். லக்ஷ்மன் செனவிரட்ன - உற்பத்தி மேம்பாட்டு அமைச்சர் நவீன் திஸாநாயக்க - பொது நிர்வாக அமைச்சர் டிலான் பெரேரா - வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே - விளையாட்டுத்துறை அமைச்சர் ரவூப் ஹக்கீம் - நீதி அமைச்சர் வாசிதேவ நாணயக்கார - தேசிய மொழி மற்றும் சமூக ஒருங்கிணைப்பு அமைச்சர் ஆகியோரே புதிய அமைச்சரவைகளை பெற்றுள்ளோராகும்.
பிரதமர் : டி.எம். ஜயரத்ன.
சிரேஷ்ட அமைச்சர்கள்:
டி.எம். ஜயரத்ன - புத்தசாசன சமய விவகாரம்
ரத்னசிறி விக்கிரமநாயக்க - சிறந்த நிருவாகம் மற்றும் அடிப்படை வசதிகள்.
டியூ குணசேகர - மனித வளங்கள்
அதாவூத செனவிரத்ன - கிராம அலுவல்கள்
பீ.தயாரத்ன - உணவூ மற்றும் போஷாக்கு
ஏ.எச.எம்.பௌசி - நகர அலுவல்கள்
எஸ்.பி.நாவின்ன - நுகர்வோர் நலன்பரி
பியசேன கமகே - தேசிய வளங்கள்
பேராசிரியர் திஸ்ஸ வித்தாரன - விஞ்ஙான அலுவல்கள்
கலாநிதி சரத் அமுனுகம - சர்வதேச நிதி ஒத்துழைப்பு
அமைச்சரவை அமைச்சர்கள்:
நிமல் சிறிபால டி சில்வா --> நீர்ப்பாசனம் நீர் வளங்கள் முகாமைத்துவம்
மைத்திரிபால சிறிசேன --> சுகாதாரம்
சுசில் பிரேமஜயந்த --> பெற்றெளலியம்
ஆறுமுகம் தொண்டமான் --> கால்நடை வளங்கள் கிராமிய சமூக அபிவிருத்தி
தினேஷ் குணவர்தன --> நீர் வழங்கல் வடிகாலமைப்பு
டக்ளஸ் தேவானந்தா --> பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு தொழில்முயற்சி அபிவிருத்தி
ஏ.எல்.எம்.அதாவூல்லா --> உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள்
ரிசாட் பதியூதீன் --> கைத்தொழில் மற்றும் வணிக அலுவல்கள்;
பாட்டலீ சம்பிக்க ரணவக்க --> மின்சக்தி மற்றும் எரிசக்தி
விமல் வீரவன்ச --> நிர்மாணத்துறை பொறியியல் சேவை வீடமைப்பு மற்றும் பொது வசதிகள்
ரவூப் ஹக்கீம் --> நீதி
பசில் ராஜபக்ஷ --> பொருளாதார அபிவிருத்தி
வாசுதேவ நாணயக்கார --> தேசிய மொழி மற்றும் சமூக ஒருங்கிணைப்பு
எஸ்.பி.திஸாநாயக்க --> உயர்கல்வி
பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் --> வெளிநாட்டு அலுவல்கள்
டபிள்யூ10.டி.ஜே.செனவிரத்ன --> அரச நிர்வாகம் மற்றும் உள்நாட்டு அலுவல்கள்
சுமேதா ஜி ஜயசேன --> பாராளுமன்ற அலுவல்கள்
ஜீவன் குமாரதுங்க --> தபால் சேவைகள்
பவித்ரா வன்னியாரச்சி --> தொழில்நுட்பம் மற்றும் அராய்ச்சி
அநுர பிரியதர்ஷன யாப்பா --> சுற்றாடல்
திஸ்ஸ கரலியத்த --> சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகாரம்
காமினி லொக்குகே --> தொழில் மற்றும் தொழில் உறவூகள்
பந்துல குணவர்தன --> கல்வி
மஹிந்த சமரசிங்க --> பெருந்தோட்டக் கைத்தொழில்
ராஜித்த சேனாரத்ன --> கடற்றொழில் மற்றும் நீரியல்வள அபிவிருத்தி
ஜனக பண்டார தென்னகோன் --> காணி மற்றும் காணி அபிவிருத்தி
பீலிக்ஸ் பெரேரா --> சமூக சேவைகள்
சி.பி.ரத்னாயக்க --> தனியார் போக்குவரத்துச் சேவைகள்
மஹிந்தயாப்பா அபேவர்தன --> விவசாயம்
கெஹெலிய ரம்புக்வெல்ல --> தகவல் மற்றும் ஊடகத் துறை
குமார வெல்கம --> போக்குவரத்து
டலஸ் அழகப்பெரும --> இளைஞர் விவகாரம் மற்றும் தொழிற் பயிற்சி அபிவிருத்தி
ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ --> கூட்டுறவூ மற்றும் உள்ளக வர்த்தகத் துறை
சந்திரசிறி கஜதீர --> புனர்வாழ்வூ மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு
சாலிந்த திஸாநாயக்க --> தேசிய வைத்தியம்
ரெஜினோல்ட் குரே--> சிறு ஏற்றுமதி பயிர் மேம்பாடு
டிலான் பெரேரா --> வெளிநாட்டு வேலைவாய்ப்பு மேம்பாடு மற்றும் நலன்புரி
ஜகத் புஷ்பகுமார --> தெங்கு அபிவிருத்தி மற்றம் மக்கள் தோட்ட அபிவிருத்தி
டி.பி.ஏக்கநாயக்க --> கலாசாரம் மற்றும் கலை
மஹிந்த அமரவீர --> இடர் முகாமைத்துவம்
எஸ்.எம்.சந்திரசேன --> கமநல சேவைகள் மற்றம் வன விலங்கியல் துறை
குணரத்ன வீரக்கோன் --> மீள்குடியேற்றம்
மேர்வின் சில்வா --> மக்கள் தொடர்பாடல் மற்றும் மக்கள் விவகாரம்
மஹிந்தானந்த அலுத்கமகே --> விளையாட்டு
தயாசிஸ்ரீத திசேறா --> அரச வளங்கள் மற்றும் முதலீட்டு அபிவிருத்தி
ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய --> தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
ஜகத் பாலசூரிய --> தேசிய மறபுரிமைகள்
லக்ஷ்மன் செனவிரத்ன --> உற்பத்தித் திறன் மேம்பாடு
நவீன் திஸாநாயக்க --> அரச முகாமைத்து மறுசீரமைப்பு
31 புதிய பிரதி அமைச்சர்கள் விபரம் வருமாறு
சுசந்த புஞ்சிநிலமே --> மீன்பிடி மற்றும் நீர் வளங்கள்
லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன --> பொருளாதார அபிவிருத்தி
ரோஹித்த அபேகுணவர்தன --> துறைமுகங்கள் மற்றும் நெடுஞ் சாலைகள்
பண்டு பண்டாரநாயக்க --> தேசிய வைத்தியம்
ஜயரத்ன ஹேரத் --> கைத்தொழில் மற்றும் வர்த்தக அலுவல்கள்
துமிந்த திஸாநாயக்க --> இளைஞர் விவகாரம் மற்றும் தொழிற் பயிற்சி அபிவிருத்தி
லஸந்த அலகியவன்ன --> நிர்மாணத்துறை பொறியியல் சேவை வீடமைப்பு மற்றும் பொது வசதிகள்
ரோஹன திஸாநாயக்க --> போக்கவரத்து
ஏச்ஆர்.மித்ரபால --> கால்நடை வளங்கள் மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி
நிர்மல கொத்தலாவல --> துறைமுகங்கள் மற்றும் நெடுஞ் சாலைகள்
பிரேமலால் ஜயசேகர --> மின்சக்தி எரிசக்தி
கீதாஞ்சன குணவர்தன --> நிதி மற்றும் திட்ட அமைப்பு
விநாயகமூர்த்தி முரளீதரன் --> மீள் குடியேற்றம்
பைஸர் முஸ்தபா --> தொழில்நுட்பம் மற்றம் விஞ்ஞானம்
இந்திக்க பண்டாரநாயக்க --> உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள்
முத்து சிவலிங்கம் --> பொருளாதார அபிவிருத்தி
சிறிபால கம்லத் --> காணி மற்றும் காணி அபிவிருத்தி
டப்ளியூ.பி.ஏ.ஏக்கநாயக்க --> நீர்ப்பாசனம் மற்றம் நீர் வளங்கள்
சந்திரசிறி சூரியாரச்சி --> சமூக சேவைகள்
நந்திமித்ர ஏக்கநாயக்க --> உயர் கல்வி
நிரூபமா ராஜபக்ஷ --> நீர் வழங்கல் வடிகாலமைப்பு
லலித் திஸாநாயக்க --> சுகாதாரம்
சரண குணவர்தன --> பெற்றொலியம்
விஜித் விஜயமுனி சொய்சா --> கல்வி
எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா --> சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகாரம்
வீரகுமார திஸாநாயக்க --> பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு தொழில்முயற்சி அபிவிருத்தி
ஏ.டி.எஸ்.குணவர்தன --> புத்த சாசனம் மற்றும் சமய விவகாரங்கள்
ஏர்ள் குணசேகர --> பெருந் தோட்டக் கதை;தொழில்
பஷீர் ஷேகு தாவூத் --> கூட்டுறவூ மற்றும் உள்ளக வர்த்தகத் துறை
அப்தல் காதர் --> சுற்றாடல் துறை
டுலிப் விஜேசேகர --> இடர் முகாமைத்துவம்
0 comments :
Post a Comment