அவுஸ்திரேலியாவிலிருந்த 30000 இந்திய மாணவர்கள் நாடு திரும்பியுள்ளனர்.
விசா பெறுவதில் கடுமையான நடைமுறை, நிரந்தர குடியுரிமை மறுப்பு, இனவெறி தாக்குதல் போன்ற காரணங்களால் ஆஸ்திரேலியாவில் இருந்து இதுவரை 30 ஆயிரம் மாணவர்கள் நாடு திரும்பியுள்ளனர்’ என்று ஆஸ்திரேலியாவின் இந்திய மாணவர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
மெல்போர்னில் வெளியாகும் இந்திய மாணவர் களுக்கான இதழில் இச்செய்தி வெளியாகியுள்ளது. ‘இந்திய மாணவர்களுக்கு இனி ஆஸ்திரேலியா கல் விக்கான விருப்ப நாடு கிடையாது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனவெறி தாக்குதல் முக்கிய காரணம். அடுத்தது வேலையின்மை. நிரந்தர குடியுரிமை மறுக்கப்படுகிறது’ என்று இந்திய மாணவர்கள் கூட்டமைப்பு செய்தி தொடர்பாளர் கவுதம் குப்தா தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment