தென் கிழக்காசிய நாடுகளில் கடத்தப்படுவோர் 250,000 பேர்.
தென்கிழக்காசிய நாடுகளுக்குள் ஒவ்வோர் ஆண்டும் பெண்களும் சிறுவர்களுமாக சுமார் 250,000 பேர் கடத்திசெல்லப்படுகின்றனர். இவர்கள் பெரும்பாலும் பாலியல் தொழில்துறையில் வேலைசெய்ய கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். ஆனால், பாலியல் அட்டூழியத் தைவிட மானிடக்கடத்தல் அதிக மாக இருப்பதாகவும் வேலை செய்ய பயன்படுத்தப் படும் சிறுவர்களும், ராணுவ வீரர்களாக்கப்படும் சிறுவர்களும் இவர்களில் அடங்குவர் என்று 4வது சிங்கப்பூரில் இடம்பெற்ற என்டிஎஸ்-ஆசியா ஆண்டு மாநாட்டில் பேசிய வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
வழக்கத்திற்கு மாறான இடர்காப்பு கல்விக்கான எஸ் ராஜரத்தினம் அனைத்துலகக் கல்விக் கழகத்தின் (என்டிஎஸ்) ஏற்பாட்டில் கடந்த வெள்ளிக் கிழமை இம்மாநாடு நடைபெற்றுள்ளது.
சட்டங்களோ செயல்திட் டங்களோ போதாத நிலை இதற்குக் காரணமல்ல. மானிடக் கடத்தல் குறித்து தென்கிழக்காசிய நாடுகளில் நிலவும் மாறுபட்ட கண்ணோட்டங்களால்தான் இவ்வட்டாரத்தில் மானிடக்கடத்தலை ஒடுக்குவதில் முன்னேற்றம் ஏற்படவில்லை எனவும்
'பல தென்கிழக்காசிய நாடுகள் மானிடக்கடத்தலை கட்டாய விபசாரமாகக் கருதுகின்றன எனவும் கட்டாயப்படுத்தி வேலை செய்ய வைக்கப்படுவோரை வேறு விவகார மாகக் கருதுகின்றன எனவும்
இவ்விரண்டையும் பிரித்துப் பார்க்கக்கூடாது' என்றும் பிலிப்பீன்ஸின் வியூக, மேம்பாட்டுக் கல்விக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் திரு ஹெர்மன் கிராஃப்ட் கூறியுள்ளார்.
இந்தக் கருத்து வேறுபாட்டால், மானிடக் கடத்தலை ஒடுக்க ஒரு நாடு அமலாக்கும் கொள்கைகள் பாலியல் அட்டூழியத்தை ஒடுக்குவதையே மையமாகக் கொண்டிருக்கும் எனவும் கட்டாய வேலையில் ஈடுபடுத்தப்படும் அல்லது ராணுவ வீரர்களாக்கப்படும் சிறுவர்களின் பிரச்னைகள் இதனால் கவனிக்கப்படாமல் போய்விடுகிறது என்ற அவர் பெண்களும் சிறுமிகளும் விபசாரத்திலும், சில வெளிநாட்டு ஊழியர்கள் கட்டாய வேலையாகக் கருதும் வேலையிலும் கட்டாயப்படுத்தப்படும் நாடாகச் சிங்கப்பூர் இருப்பதாக மாநாட்டின்போது குறிப்பிடப்பட்டுள்ளார்.
மனிதர்களை, குறிப்பாகப் பெண்களையும் சிறுவர்களையும் கடத்துவதைத் தடுத்து, ஒடுக்கி, தண்டிக்கும் ஐக்கிய நாட்டு நிறுவன உடன்பாட்டில் சிங்கப்பூர் கையெழுத்திடாவிட்டாலும், பீனல் சட்டம், வேலை வாய்ப்பு முகவைகள் சட்டம், வெளிநாட்டு ஊழியர் வேலை நியமனச் சட்டம் போன்றவற்றின்மூலம் மானிடக்கடத்தல் சிங்கப்பூரில் குற்றமாகக் கையாளப்படுவதாக என்டிஎஸ் ஆய்வாளர்கள் மன்பவன் கோர், பி.கே.ஹாங் ஜோ ஆகியோர் சுட்டிக்காட்டியுள்ளனனர்.
'பாலியல் மற்றும் தொழி லாளர் கடத்தலுக்கான தண்ட னைகள் போதிய அளவு கடுமையாகவே உள்ளன' என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
வெளிநாட்டு ஊழியர் வேலை நியமனச் சட்டம் கண்டிப்பாக அமல்படுத்தப்பட்டிருப்பதால், தொழிலாளர் துறையில் சட்டவிரோத ஊழியர்கள் குறைந்திருப்பதாகவும், வெளிநாட்டு ஊழியர்களுக்குக் காலந்தாழ்த்தாமல் சம்பளம் தரத் தவறும் அல்லது பராமரிக்கத் தவறும் முதலாளிகள் கடுமையாகத் தண்டிக்கப்படுவதாகவும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மனிதர்கள் கடத்தப்படும் நாடுகள், கடத்திச் செல்லப்படும் நாடுகள் ஆகியவற்றை ஈடுபடுத்தும் பன்முனை அணுகுமுறையுடன், பொதுமக்களுக்கு விவரமளித்து, மலிவான தொழிலாளர்களுக்கான தேவையைக் கட்டுப்படுத்தினால், மானிடக்கடத்தலைக் குறைக்க முடியும் என்று வல்லுநர் கள் கூறுகின்றனர்.
0 comments :
Post a Comment