இந்தியர்களை ஏமாற்றிய ஹெஸ் 2பி விசா மோசடி அம்மபலம்.
அமெரிக்காவில் தற்காலிக பணிகளுக்காக அயல் நாடுகளிலிருந்து பணியாளர்களை கொண்டுவர அளிக்கப்படும் ஹெச் 2பி விசாவைப் பயன்படுத்தி 87 இந்தியர்கள் ஏமாற்றப்பட்டதை அந்நாட்டு அரசு அமைப்பு அம்பலப்படுத்தியுள்லது. அமெரிக்க அரசு அமைப்பான பணியாளர்கள் பொறுப்பு அலுவலகம் [ Government Accordability office GAO] இந்த விசா மோசடியை அம்பலப்படுத்தியுள்லது. ஹெச் 2பி விசா என்பது குடியேற்ற உரிமையற்ற தற்காலிகமாக ஒரு காலகட்டத்திற்கு மட்டும் அமெரிக்காவிற்கு வந்து விவசாயம் அல்லாத துறைகளில் பணியாற்ற அளிக்கப்படும். 87 இந்தியர்களை பணிக்காக அழைத்து வந்த லௌசியானா நிறுவனம் 18 மில்லியன் டாலர் அவர்களிடம் மோசடி செய்துள்ளதாகவும், அவர்களில் பலரை மோசடியாக தயாரிக்கபட்ட ஆவணங்களாகக் காட்டி அழைத்து வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment