ஒபாமாவின் உதடு கிழிந்து 12 தையல்கள்
கூடைப்பந்து விளையாடி கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அமெரிக்க அதிபர் ஒபாமாவின் உதடு கிழிந்து 12 தையல்கள் போடப்பட்டது. ஓய்வு நாளான இன்று அதிகாலை தமது உறவினர்கள், நண்பர்களுடன் ஒபாமா கூடைப்பந்து விளையாடி கொண்டிருந்தார். அப்போது எதிர் அணி வீரர் ஒருவர் ஒபாமாவிடம் இருந்து பந்தை பறிக்க முயன்றுள்ளார்.
ஆனால் லாவகமாக பந்தை கடத்தி சென்று கொண்டிருந்தபோது மற்றொரு வீரரின் கைமூட்டு ஒபாமாவின் உதட்டில் பலமாக இடித்துள்ளது. எதிர்பாராத இந்த நிகழ்வால் ஒபாமாவின் உதடு கிழிந்து ரத்தம் கொட்டியது.
வலியால் துடித்த அவரை உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற அதிகாரிகள் முதலுதவி அளித்தனர். பின்னர் மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு உதட்டில் 12 தையல்கள் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
சுமார் 2 மணி நேர ஓய்விற்கு பிறகு ஒபாமா அலுவல்களை கவனிக்க வெள்ளைமாளிகைக்கு புறப்பட்டு சென்றார்.
0 comments :
Post a Comment