இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. 11 பேர் பலி
அருணாச்சல் பிரதேசத்தில் சீன எல்லையையொட்டி உள்ள டவாங் என்ற இடத்தில் இன்று பகல் 12.05 மணியளவில் இந்திய விமானப்படையின் எம்ஐ ரக ஹெலிஹாப்டர் ஒன்று நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 பேருடன் டவாங்கிலிருந்து கவுகாத்தி நோக்கி புறப்பட்ட அந்த ஹெலிகாப்டர் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானது.
இதில் அதில் பயணம் செய்த 11 பேருமே உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது:
இந்த விபத்தில், ஹெலிகாப்டரில் பயணம் செய்த இரண்டு விமானிகள் மற்றும் 9 பயிற்சி விமானிகள் பலியானதாக ராணுவ செய்தித் தொடர்பாளர் ராஜேஷ் கைலா தெரிவித்துள்ளார்:
இதுவரை 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், எஞ்சியவர்களில் உடலை மீட்கும் பணியில் ராணுவம் ஈடுபட்டுள்ளது.
0 comments :
Post a Comment