Thursday, November 25, 2010

1000 USA கொடுத்து ஒபாமாவுடன் படம்பிடித்த இலங்கை ராஜதந்திரி.

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுடன் சந்திப்பு என கலிபோர்னியாவிற்கான இலங்கையின் தூதரகப் பிரதிநிதி ஜெப் குணவர்தன அண்மையில் ஊடகங்களுக்குப் புகைப்படமொன்றை வெளியிட்டிருந்தார். குறிப்பிட்ட புகைப்படத்துடன் வெளியாகிய செய்தியில் அமெரிக்க ஜனாதிபதியை சந்தித்த கலிபோர்னியாவிற்கான இலங்கைத் தூதர் இலங்கை அமெரிக்கா ஆகிய இருநாடுகளுக்குமான நட்புறவின் அவசியத்தை அமமெரிக்க ஜனாதிபதிக்கு எடுத்துரைத்தாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் குறிப்பிட்ட புகைப்படம் 1000 அமெரிக்க டொலர்கள் வழக்கப்பட்டு எடுக்கப்பட்டது எனவும் மேற்படி செய்திக்கும் படத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனவும் சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவிக்கின்றது. இப்படம் எவ்வாறு எடுக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

கடந்த ஒக்டோபர் மாதம் 22ம் திகதி லொஸ் ஏஞ்சல்ஸ் பல்கலைக்கழகத்தில் குடியரசுக் கட்சிக்கு நிதி சேகரிப்பு நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்நிதிசேகரிப்பில் கலந்து கொண்டு 1000 அமெரிக்க டொலர்களுக்கு மேல் பணம் வழங்குவோர் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுடன் படம்பிடித்துக்கொள்ளமுடியும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

சந்தர்ப்த்தை பயன்படுத்துவதற்கு திட்டமிட்ட நம்நாட்டின் கலிபோனியாவிற்கான ராஜதந்திரி ஜெப் குணவர்தன அங்கு சென்று மணித்தியாலங்கள் காத்திருந்து ஒருதொகைப் பணத்தை அன்பளிப்புச் செய்து படத்தை பிடித்துக்கொண்டுள்ளார். படத்திற்கு போஸ் கொடுப்பதற்காக பராக் ஒபாமா அங்கு வந்திருந்தபோது , அன்பளிப்பாளர் ஒருவருக்கு படம்பிடிப்பதற்காக 1 நிமிடநேரமே ஒதுக்கியிருந்துடன் , அன்பளிப்பாளர்கள் ஒபாமாவை நெருங்குவதற்கு 4 வரிகள் போடப்பட்டிருந்தாகவும் அனைவரும் மிகவேகமாகச் சென்று படங்களைப் பிடித்துக்கொண்டதாகவும் கூறப்படுகின்றது. படம்பிடிக்க சென்ற அன்பளிப்பாளர்களை சிரித்த முகத்துடன் Hi (ஹாய்) கூறி வரவேற்ற ஒபாமா படம் பிடித்தவுடன் Thank you very much (தங் யு வெறி மச்) சொல்லி அனுப்பியுள்ளார்.

குறிப்பிட்ட ராஜதந்திரி மேற்படி படத்தினை வெளியிட்டு அச்செய்தியினை வெளியிட்டதன் பின்னணி ஒட்டுமொத்த மக்களை ஏமாற்றுவதற்கு மட்டுமல்ல , இலங்கை அரசினை அச்சுறுத்துவதற்கும், தனது நிலையை நீடித்துக்கொள்வதற்கும் என தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக அமெரிக்க உறவுகளை கொண்டுள்ள ராஜதந்திரிகள் இலங்கையில் ஒர் வித்தியாசமான கோணத்தில் அணுகப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.

புலம்பெயர் தேசத்திலே போர்க்குற்றம் , மாவீரர் தினம் என புலித்தொழிலாளர்கள் தமது ஏமாற்றுவித்தைகளை முன்னெடுக்கின்றபோது அவற்றினை முறியடிப்பதற்கு ஆக்கபூர்வமான செயற்பாடுகளை செய்யவேண்டிய இலங்கை ராஜதந்திரிகள் இலங்கை அரசின் பணத்தினை பராக் ஒபாமாவுடன் படம்பிடிப்பதற்கும் , அதற்கான பயணங்களுக்கும் செலவிட்டுள்ளனர். குறிப்பிட்ட நிகழ்வில் இராஜதந்திரியும் அவரது பிரத்தியேகச் செயலாளரும் பணம் செலுத்தி கலந்து கொண்டுள்ளனர்.

நிகழ்வில் கலந்து கொண்ட சில இலங்கை புத்திஜீவிகள் சகலவற்றையும் அவதானித்ததை உணராக இராஜதந்திரி படத்தினை ஊடகங்களுக்கும் வெளியிட்டு கதையும் எழுதியுள்ளாதாக தெரியவருகின்றது.





0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com