சர்வதேசத்துடன் இணைந்து அரசு இலவசக் கல்வியை அழிக்க முயல்கின்றது. JVP
அரசாங்கம் சர்வதேசத்துடன் இணைந்து பல்கலைக்கழகங்களில் இலவசக் கல்வியை அழிக்க சதித் திட்டங்களைத் தீட்டிவருவதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவிக்கின்றார். பல்கலைக்கழகக் கல்விக்கென அரசாங்கம் குறைந்தளவான நிதியையே ஒதுக்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதன் காரணமாக, பல்கலைக்கழகத்திற்குள் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை திசைத்திருப்ப அரசாங்கம் முயற்சிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளுக்கும் மக்கள் விடுதலை முன்னணியினருக்கும் இடையில் இன்று முன்னணியின் தலைமையகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே சோமவன்ச அமரசிங்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் எஸ்.பி.திஸாநாயக்க உயர்கல்வி அமைச்சராக பதவிப் ஏற்றுக் கொண்டதைத் தொடர்ந்து பல்கலைக்கழகங்களில் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதென சோமவன்ச அமரசிங்க குற்றம் சுமத்தியுள்ளார். அரசாங்கத்தின் இவ்வாறான திட்டங்கள் குறித்து முன்வந்து கேள்வி எழுப்புமாறு அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகளிடம் சோமவன்ச அமரசிங்க கேட்டுக் கொண்டுள்ளார்.
0 comments :
Post a Comment