Wednesday, October 27, 2010

முல்லைத்தீவில் Fitness சென்ரறாம்.

வன்னிப்பிரதேசத்தில் இயங்கிவரும் சிறிரெலோ எனப்படும் குழுவினை சேர்ந்த ஜேர்மன் பிரஜா உரிமையுடைய நபர் ஒருவர் தான் வன்னியில் வாழ்விழந்து நிற்கும் மக்களுக்கு உடற்பயிற்சி வழங்கப்போகின்றேன், அதற்கான உபகரணங்கள் வேண்டும் என புலம்பெயர் நாடுகளிலுள்ள பலரிடமும் கடந்த சில வாரங்களாக தொலைபேசி அழைப்புக்களை ஏற்படுத்தி வேண்டுதல் விடுப்பதாக தெரியவருகின்றது.

மக்களின் அவலங்களின் பெயரால் பிழைப்பு நடாத்தும் கும்பல்கள் காலத்திற்கு காலம் ஒவ்வொரு யுக்தியை கண்டுபிடிப்பது வழமை. வன்னியில் உள்ள மக்கள் அன்றாட வாழ்கைச் செலவிற்காகவும் குழந்தைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் : சீருடைகள் என்பவற்றிற்காக போராடிக்கொண்டிருக்கும் இத்தருணத்தில் பொடிபில்டிங்செய்ய மெசின்வேண்டும் என்ற ஓர் வேண்டுகோள் என பலர் விசனமடைந்துள்ளனர்.

அத்துடன் குறிப்பிட்ட உடற்பயிற்சி நிறுவனம் ஒன்றினை நிறுவுவதற்காக பொருட்களை சேகரிக்க ஆரம்பித்திருக்கும் நபர் லண்டனை தளமாக கொண்டு இயங்கும் வானொலி ஒன்றில் உதவியாளராக இருந்தபோது வானொலி நிர்வாகத்தினருக்கு வந்திருந்த 50 பவுண்ட் மணியோடரை திருடிக்கொண்டு மாயமானவர் என்ற பெருமைக்குரியவராவர் எனவும் கடந்தகாலங்களில் வன்னி இடைத்தங்கல் முகாம் யுவதிகள் பலரின் வாழ்வுடன் திருவிளையாடல் புரிந்துள்ளவர் எனவும் தெரியவருகின்றது.

முருகுப்பிள்ளை முள்ளியவளை


6 comments:

  1. புலம்பெயர்ந்த நாடுகளிலுள்ள தமிழ் திருட்டுக்கூட்டம் திருந்தப் போவதில்லை.
    இதுவரை காலமும் பிணங்களை வைத்து பணம் சம்பாதித்தார்கள். இப்போ அகதிகளை வைத்து பணம் சம்பாதிக்கிறார்கள். இதுகளை விடக் கேவலமானவர்கள் உலகில் ஒருவருமில்லை.

    ReplyDelete
  2. வவுனியா இடைத்தங்கல் முகாம்களில மக்களுக்கு செய்யப்போறம் போறம் எண்டு கனக்க செய்தவயள். மன்னார்லயும் செய்தவயள். இப்ப பிற்னஸ் செய்யப்போயினமே நல்லது நல்லது. நல்ல கட்டு மஸ்தான பொடிச்சியளும் வாருவாளயளல்லோ ஆ:ஆ

    ReplyDelete
  3. அலக்ஸ் ராகவன் ஆக்களையும் கூட்டிக்கொண்டு போனால் நல்ல எக்சசய்சொல்லி கொடுப்பினம்.

    ReplyDelete
  4. வன்னி மக்களுக்கு போட்டோ புடிக்கிற பயிற்சியும் தேவை. கமறா கொஞ்சம் இருக்கு தந்தால் வீடுகளுக்குள் புகுந்து எவ்வாறு போட்டோ புடிக்கிற என்று படிப்பிக்க முடியுமோ?

    ReplyDelete
  5. முள்ளியவளையில் பிற்னஸ் சென்றரோ? அங்குள்ள கிணற்றில தண்ணி எத்தின அடிக்கு கீழே இருக்கெண்டு தெரியுமோ? வாழியை போட்டு இழு இழு என்று இழுத்து உடம்பில வாத்திட்டு அடுத்த வாழி அள்ளிறத்துக்குள்ள தண்ணி காஞ்சி போயிரும். இதைவிட பிற்னஸ் சென்ரரா. வாழ்க வாழ்க

    ReplyDelete
  6. நாட்டு நடப்புகள் தொடர்பாக சில படங்கள மெயிலில அனுப்பி வைத்தநான். அதற்கப்புறம் இனிமேல் நான் சாப்பிடிறத்துக்கு மட்டும்தான் வாயை திறப்பேன் அதை தவிர எதுவும் கதைப்பதற்கு எனக்கு அருகதை இல்லை என்று அழுது திரிந்தவரா இவர்.

    ReplyDelete