செச்சினிய பாராளுமன்றை கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்த ஆயுததாரிகள்.
செச்சினிய பாராளுமன்றினுள் நேற்று அதிரடியாக நுழைந்த துப்பாக்கிக்காரர்கள் குறைந்தது 3 பேரை சுட்டுக் கொன்றதாகவும் பலரை காயப்படுத்தியதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மூன்று பேர் துப்பாக்கிகளுடன் நாடாளுமன்றக் கட்டடத்திற்குள் நுழைந்ததாகவும் நாடாளுமன்ற சபாநாயகரின் அலுவலகத்திற்கு மிக அருகில் அவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் புலன் விசாரணையாளர்கள் கூறினர்.
அதிர்ஷ்டவசமாக நாடாளுமன்ற சபாநாயகர் டுஜுவாகா அதுர கமனாவ், அக்கட்டத்தை விட்டு பாதுகாப்பாக வெளியேற்றப் பட்டதாக அதிகாரி ஒருவர் கூறினார். துப்பாக்கிக்காரர்கள் சுட்டதில் குறைந்தது இரு பாதுகாப்பு காவலர்களும் நாடாளுமன்ற ஊழியர் ஒருவரும் கொல்லப் பட்டதாகக் கூறப்படுகிறது.
நாடாளுமன்றத்திற்குள் அதிரடியாக நுழைந்த துப்பாக்கிக் காரர்களில் ஒருவன் தன் உடம்பில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்ததாகவும் ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர். உள்ளே நுழைந்த மற்ற இரு துப்பாக்கிக்காரர்கள் நாடாளுமன்றத்தில் இருந்த ஊழியர்களையும் நாடாளுமன்ற உறுப் பினர்கள் சிலரையும் பிணை பிடித்து வைத்திருந்தனர்.
அதனைத் தொடர்ந்து சிறப்பு அதிரடிப் படையினரின் ஒருங்கிணைந்த நடவடிக்கையால் அவ்விரு துப்பாக்கிக்காரர்களும் சுட்டுக் கொல்லப்பட்டனர். பிணை பிடித்து வைக்கப்பட்டிருந்த ஊழியர்களும் நாடாளுமன்ற உறுப் பினர்களும் பத்திரமாக விடுவிக்கப் பட்டதாக போலிசார் கூறினர்.
ரஷ்யாவின் செச்சென்ய குடியரசில் பொதுவாக வன் செயல்கள் அதிகமாக நடக்கும் என்ற போதிலும் நாடாளு மன்றத்தினுள் தீவிரவாதிகள் புகுந்து அங்கிருந்தவர்களை பிணைபிடித்து வைத்ததது இதுவே முதல் தடவை என்று கூறப் படுகிறது.
இந்நிலையில் சிறப்பு போலிஸ் படையின் அதிரடி நடவடிக்கையை ரஷ்ய உள்துறை அமைச்சர் ரஷீத் நர்கலிவ் பாராட்டியுள்ளார். தீவிரவாதிகளின் தாக்குதலை முறியடித்து அதிகமானோர் உயிரிழக்கும் அபாயத்தை போலிசார் தடுத்து நிறுத்தி யிருப்பதாக அவர் கூறினார்.
0 comments :
Post a Comment