பெண்டகன் மீது மர்ம நபர்கள் தாக்குதல்!
அமெரிக்காவின் ராணுவ தலைமை அலுவலகமான பெண்டகன் மீது மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வாஷிங்டன் நகரை ஒட்டி அமைந்துள்ளது பெண்டகன். கடும் பாதுகாப்பு போடப்பட்டுள்ள இடம் இது. இருந்தும் 19.10.2010 அதிகாலை 5 மணி அளவில் அக்கட்டிடத்தின் மீது மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. உடனே பாதுகாப்பு படையினர் ராணுவ தலைமை அலுவலகம் முழுவதும் தேடினர். யாரும் சிக்கவில்லை.
மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் ராணுவ தலைமை அலுவலக கட்டிடத்தின் லேசான பாதிப்பு ஏற்பட்டது. யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. இச் சம்பவத்தை தொடர்ந்து ராணுவ தலைமை அலுவலகத்தை சுற்றியுள்ள ரோடுகள் மூடப்பட்டன. மற்றும் அங்கு பாதசாரிகள் நுழைவு வாயிலும் அடைக்கப்பட்டது. ஆனால் சிறிது நேரத்தில் ரோடுகள் மீண்டும் திறக்கப்பட்டன.
ராணுவ தலைமை அலுவலகத்தில் இருந்து 3 கி.மீட்டர் தூரத்தில் தேசிய அருங்காட்சியகம் உள்ளது. அங்குள்ள ஜன்னல்களில் துப்பாக்கியால் சுடப்பட்ட அடையாளங்கள் இருந்தன.
இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து பார்த்தபோது கைத்துப்பாக்கியால் சுடப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதே போன்றுதான் ராணுவ தலைமையகத்திலும் நடந்துள்ளது.
எனவே, இந்த இரு சம்பவங்களிலும் ஒரே கும்பல் ஈடுபட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். விசாரணை தொடர்கிறது.
0 comments :
Post a Comment