பிரபாகரனின் தாயார் திருமதி பார்வதி வேலுப்பிள்ளை மீது அவரது பிள்ளைகளுக்கு அக்கறை கிடையாது என வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலையின் பிரதான வைத்திய அதிகாரி கே. மைலேறும்பெருமாள் தெரிவித்துள்ளார். வீரகேசரி இணையத்தளத்தின் வெளிச்சம் நிகழ்சியின் ஊடகவியலாளர்கள் திருமதி வேலுப்பிள்ளை தங்கவைக்கப்பட்டுள்ள வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலைக்குச் சென்று அவரது உடல்நிலை தொடர்பாக வைத்திய அதிகாரியிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் திருமதி வேலுப்பிள்ளையின் உடல்நிலை தொடர்பாக தெரிவிக்கையில், அவருக்கு மிகவும் நீண்டகாலமாக (13 வருடங்களாக) இருந்துவரும் பாரிசவாய் நோய் உள்ளது. அதைத்தவிர வேறு வியாதிகள் கிடையாது. ஆனால் தனிமையை எண்ணி தவிக்கின்றார். நாம் எம்மால் முடிந்தவற்றை செய்து கொடுக்கின்றோம். ஆனால் அவரது குழந்தைகள் அவரிடம் இங்கு வருவார்களானால் அவர் அதியுறும் வியாதிகளில் 75 வீதமானவை குணமாகிவிடும் என வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment