Tuesday, October 19, 2010

சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாணவர்கள் மன்னிப்பு கோரவேண்டும். கல்வி அமைச்சர்.

உயர்கல்வி அமைச்சின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் 21 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் மன்னிப்பு கோரி கடிதம் ஒன்றினை எழுதி தந்தால் விடுவிக்கப்படுவர் எனவும் தெரிவித்துள்ளார்.

இம்மாணவர்களின் பெற்றோரை நேற்று அலறி மாளிகையில் சந்தித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அப்பாவி பல்கலைக்கழக மாணவர்களை சிறைவைக்க அவசியம் இல்லை எனவும், முறையாக பிணைக் கோர வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ள பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள் நால்வரின் பெற்றோர் மற்றும் நேற்று மாலை ஜனாதிபதி மாளிகையில் சந்திப்பு இடம்பெற்றது குறிப்பிடத்தக்கதாகும்;:

பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி இளைஞர்களுக்கான நாளை அமைப்பு ஜனாதிபதிக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியதன் பயனாக இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

சிறை வைக்கப்பட்டுள்ள மாணவர்கள் பிறரினுடைய வழிகாட்டல்களுக்கு அமைய செயற்பட்டு வருவதாகவும், அவர்கள் பல்கலைக்கழகத்திற்கு உள்வாங்கப்பட்டு ஒரு வருடமே பூர்த்தியானவர்கள் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

இந்த சந்திப்பின் போது கருத்து தெரிவித்த உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க, தாம் பிழை செய்துவிட்டதாகவும், தங்களுடைய பிழையை ஏற்றுக் கொள்வதாகவும், மீண்டும் இவ்வாறான பிழைகளை செய்ய மாட்டோம் எனவும் கடிதம் எழுதி குறித்த மாணவர்கள் கையொப்பமிட்டு தருவார்களாயின் மாணவர்களுக்கு நீதி கிடைக்குமென தான் எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த சந்திப்பினை அடுத்து தமது பிள்ளைகளிடம் மன்னிப்புக் கடிதத்தை பெற்றுத் தருவதாக பெற்றோர்கள் உறுதியளித்துள்ளனர்.

No comments:

Post a Comment