Tuesday, October 12, 2010

யாழ் பல்கலைக்கழக மாணவிக ளுக்கு பாலியல் துன்புறுத்தல் அச்சுறுத்தலாகவுள்ளது.

யாழ்க்குடா நாட்டில் குறிப்பாக பல்கலைக்கழக சூழலில் மாணவிகள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் காரணமாக தற்கொலை முயற்சிகள் என்றுமில்லாவாறு அதிகரித்திருப்பதாக யாழ் அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் எச்சரித்திருக்கின்றார். நேற்று யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இந்தக் கவலையை வெளியிட்டிருந்தார். பிராந்திய சுகாதார திணைக்கள வைத்திய பெண் அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டியே இந்தத் திடுக்கிடும் தகவல்களை யாழ் அரச அதிபர் வெளியிட்டிருந்தார்.

பல மாணவிகள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகவும் ஏற்கனவே தற்கொலை செய்து கொண்ட மாணவிகளின் பின்னணியில் இவ்வாறான பாலியல் துன்புறுத்தல்கள் உள்ளமை கண்டறியப்பட்டிருப்பதாகவும் அது தொடர்பாக குறித்த வைத்திய அதிகாரி தன்னிடம் விபரங்களை வழங்கியிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே இடம்பெற்ற பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் மற்றும் தற்போது இடம்பெறுகின்ற பாலியல் துன்புறுத்தல்களின் பின்னணியில் பல்கலைக்கழக விரிவுரையாளர்களே உள்ளதாக அவர் குற்றம்சாட்டி இருந்தமை பெரும் பரபரப்பையும் திடுக்கிடுதல்களையும் ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக அண்மையில் யாழ் மாவட்ட சிறார்கள் மீதான துஸ்பிரயோகங்கள் தொடர்பாக இடம்பெற்ற கூட்டம் ஒன்றின் போதே சுகாதார திணைக்களப் பெண் வைத்திய அதிகாரி இந்தத் தகவல்களை வெளியிட்டதாகவும் அவர் தெரிவித்தார். அண்மைக்காலங்களில் மட்டும் 77க்கும் அதிகமான சிறுவர் துஸ்பிரயோகங்கள் இடம்பெற்றிருக்கின்றமை தொடர்பான பதிவுகள் வந்திருப்பதாக அவர் தெரிவித்தார். இதனிடையே சுயாதீன சிறுவர் துஸ்பிரயோகங்களை கட்டுப்படுத்தும் அமைப்புக்கள் அண்மைக்காலங்களில் இவை வேகமாக அதிகரித்திருக்கின்றமை கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் அதிர்ச்சியை தருவதாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com