Wednesday, October 20, 2010

அகதிகள் தொடர்பில் கனடா புதிய சட்டம்?

சட்டவிரோத குடியேற்றவாசிகளைக் குறைக்க கனேடிய அரசு புதிய சட்டமூலம் ஒன்றை நாளை அந்த நாட்டு பாராளுமன்றில் சமர்பிக்கவுள்ளது. ஒட்டாவாவில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய கனேடிய பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் இதனை உறுதி செய்துள்ளார்.

கடந்த ஓகஸ்ட் 13ஆம் திகதி இலங்கைத் தமிழர்கள் 492 பேர் எம்.வி.சன்.சி. கப்பலில் கனடாவை சென்றடைந்தனர். இதனையடுத்து சட்ட விரோத குடியேற்றவாசிகள் கனடாவிற்குள் நுழைவதை தடுத்து நிறுத்த புதிய சட்டம் ஒன்றினை அறிமுகப்படுத்துவது குறித்து கனடாவின் கவனம் திரும்பியது.

இச்சட்டம் மிகவும் வலுவானதாக இருக்கும் என்றும் சட்டத்தின் மூலம் கடல்வழியாக, சட்டவிரோதமாக கனடாவில் புகழிடம் கோருபவர்களின் எண்ணிக்கையை கட்டுப்பாட்டிற்கு கொண்டுவ​ர முடியுமென கனேடிய பிரதமர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com