இந்தியாவுக்கு வரும் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா நாடாளுமன்றத்தில் நவம்பர் 8 ஆம் திகதி உரை நிகழ்த்துவார். அந்த தினத்தில் பாராளுமன்றத்தில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள். சிறப்பு அழைப்பாளர்கள், முன்னாள் எம்.பி.க்கள் மட்டும் அனுமதிகப்படுவார்கள் என்று பாராளுமன்ற வட்டாரம் தெரிவித்துள்ளது. ஒபாமா நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தவுள்ளதால் பாராளுமன்ற வளாகத்துக்குள்ளும் வெளியேயும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன.
அதன் ஒரு பகுதியாகத்தான் ஒபாமா உரை நிகழ்த்தும் நாளில் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்படவுள்ளதும் என்றும் அந்த வட்டாரம் கூறியுள்ளது. ஒபாமாவின் வருகையை முன்னிட்டு மும்பை, டில்லியில் உள்ள பாதுகாப்பு சூழலை ஆய்வு செய்ய அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் குழு இந்தியாவுக்கு வந்துள்ளது. அந்தக் குழு விரைவில் பாராளுமன்றத்துக்கும் வந்து பாதுகாப்பு சூழலை ஆய்வு செய்யவுள்ளது. பாராளுமன்றத்துக்குள் பராமரிப்பு பணி நடந்து வருகிறது. அந்தப் பணி ஒபாமா வருகையால் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இன்னும் சில தினங்களில் நிறைவடைந்துவிடும் என்றும் பாராளுமன்ற வட்டாரம் தெரிவித்துள்ளது. பாராளுமன்றத்தில் நவம்பர் 8 ஆம் திகதி மாலை 5 மணிக்கு ஒபாமா உரையைத் தொடங்குவார். அதிகபட்சம் 20 நிமிடம் உரையாற்றுவார். துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி வரவேற்புரை நிகழ்த்துவார்.சபாநாயகர் மீரா குமார் நன்றியுரை ஆற்றுவார்.
No comments:
Post a Comment