சிங்கள மக்கள் யாழ்ப்பாணத்தில் மீள் குடியேற்றப்படுவதற்கு தாம் எதிர்ப்பை வெளியிடவில்லை என தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சிங்கள மக்களை சந்தித்து தாம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவம் குறிப்பிட்டுள்ளார். மேலும் அம்மக்கள் யாழ்ப்பாணத்தில் மீள் குடியேறுவதற்காக விடுத்துள்ள கோரிக்கை குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த மக்களின் தேசிய அடையாள அட்டையில் அவர்கள் யாழ்ப்பாணத்தில் பிறந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறான சிங்கள மக்களை யாழ்ப்பாணத்தில் மீள் குடியேற்றுவது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment