பிரித்தானிய தமிழர் பேரவைக்கு நெடியவன் குழு மிரட்டல். எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தோல்வி.
இலங்கையில் வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிக்கும் பொருட்டு சர்வதேச தந்திரோபாய கற்கைநெறிசார் கல்வி நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மகாநாட்டில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் அவர்கள் பிரத பேச்சாளராக கலந்து கொண்டிருந்தார். இம்மகாநாட்டினை எதிர்த்து பிரித்தானிய தமிழர் பேரவையினர் ஆர்பாட்ட பேரணி ஒன்றினை நடாத்தியிருந்தனர்.
ஆனால் பிரித்தானிய தமிழர் பேரவையினரின் ஆர்ப்பாட்டம் படுதோல்வியடைதுள்ளதுடன், ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நெடியவன் குழுவினருக்கும் தமிழர் பேரவையின் தலைவருக்குமிடையே பலத்த வாக்குவாதம் இடம்பெற்றதாக அதில் கலந்து கொண்ட புலி ஆதரவாளர் ஒருவர் இலங்கைநெற் க்கு தெரிவித்தார்.
இம்முரண்பாடு தொடர்பாக தெரியவருவதாவது, ஆர்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த நெடியவன் குழுவினர் பைகளில் புலிக்கொடிகளை கொண்டுவந்து ஆர்ப்பாட்டம் ஆரம்பமானபின்னர் பின்வரிசையிலிருந்து புலிக்கொடிகளை உயர்த்தியுள்ளனர். புலிக்கொடியை கண்ட பிரித்தானிய தமிழர் பேரவையின் தலைவர் இந்நிகழ்வில் புலிக்கொடியை காண்பிக்கவேண்டாம் என நெடியவன் குழுவினரை கேட்டுள்ளார். அப்போது தலைவருக்கும் நெடியவன் குழுவினருக்கும் வாக்குவாதம் முற்றயதுடன் தலைவரின் கால் அடித்து முறிக்கப்படுமெனவும் நெடியவன் குழுவினர் அச்சுறுத்தியுள்ளனர். அச்சுறுத்தலுக்கு பயந்த தலைவர் நாங்களும் புலிகள் , நீங்களும் புலிகள் ஆனால் இந்நிகழ்வில் புலிக்கொடி காண்பிக்கமுடியாது நாம் சட்டச்சிக்கல்களை எதிர்கொள்ளநேரிடும் என மண்டாட்டமாக கேட்டதாகவும் , புலிகொடி காட்டவேண்டுமாயின் நாம் அதற்கான நிகழ்வு ஒன்றினை ஏற்பாடு செய்து கொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் தாம் கடந்தகாலத்தில் புலிக்கொடி காட்டியதன் ஊடாக சந்தித்தித்த பின்னடைவுகளையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதுஎவ்வாறாயினும் பாரிய விளம்பரங்களுடனும் அறைகூவல்களுடனும் நன்கு திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்ட பிரித்தானிய தமிழர் பேரவையின் ஆர்ப்பாட்டம் ஏற்பாட்டாளர்களின் எதிர்பார்ப்பை எட்டவில்லை என தெரியவருகின்றது. பிரித்தானிய தமிழர் பேரவையினருக்கு பொலிஸார் அனுமதி வழங்கியிருந்தபோதும் அங்கு கடைப்பிடிக்கவேண்டிய நடைமுறைகள் தொடர்பாக மிகவும் கடினமான நிபந்தனைகளுடன் மாநாடு நுழைவாயிலிருந்து சுமார் 50 மீற்றர் தூரத்திற்கு அப்பாலேயே அவர்கள் ஒன்று கூடுவதற்கு அனுமதியளிக்கப்பட்டிருந்ததாகவும் தெரியவருகின்றது.
அத்துடன் மாநாடு நடந்த நுழைவாயிலில் இலங்கை சார்பான பிரச்சாரத்தினை முன்னெடுப்பதற்கு பிரித்தானிய இலங்கையர் பேரவையினருக்கு பொலிஸாரின் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இலங்கைத் சிங்கள , தமிழ், முஸ்லிம் மக்களை கொண்ட பிரித்தானிய இலங்கையர் பேரவையினர் மாநாட்டு நுழைவாயிலில் நின்று தமது பிரச்சார துண்டுப்பிரசுரங்களை வழங்கினர். இந்நிகழ்வின் காரணமாக பிரித்தானிய தமிழர் பேரவையினர் மண்டப நுழைவாயிலை அணுகமுடியால்போயுள்ளதுடன் புலிகளின் இவ்வார்பாட்டத்தினை மாநாட்டில் கலந்து கொள்ளவந்திருந்தவர்கள் எவரும் கண்டுகொள்ளவில்ல என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் பேராசிரியர் ஜிஎல் பிரீஸ் தனது உரையினை முடித்துவிட்டு மண்டபத்திலிருந்து மதியம் 11.15 மணியளவில் வெளியேறிய பின்னர் , நண்பகல் 12.30 மணியளவிலேயே குறிப்பிட்ட ஆர்பாட்டம் ஆரம்பமானதும் , அதில் சுமார் 250 கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இவ்வாறான நிகள்வுகளுக்கு கடந்த காலங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் அணிதிரண்டிருந்த நிலையில் இந்நிகழ்வில் 250 பேரளவிலேயே திரண்டுள்ளனர். வெளிநாட்டுப் புலிகளின் செயற்பாடுகளின் பின்னால் ஒன்று திரழ்வதற்கு மக்கள் தொடர்ந்தும் தயாரில்லை என்பது இந்நிகழ்வினூடாக தெளிவாகியுள்ளது.
1 comments :
தமிழ் நோர்வே விடுதலைப் புலிகளுக்கும், தமிழ் லண்டன் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தகராறு.
முக்கிய காரணம் இதுவரைக்கும் சுருட்டிய பணம், பணம்,... அதன் அதிபதி யார்?
இதை அறியாத தமிழ் வெருளிகள் பல வரிசையில் நிற்கும் காட்சி தான் இது.
Post a Comment