Wednesday, October 13, 2010

காலலொன்றை இழந்தாலும் தன்னம்பிக்கை இழக்காத சிறுமியின் வேண்டுதலுக்கு உதவிடுவீர்.

மாந்தைமேற்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்கு உட்பட்ட பள்ளமடு கிராமத்தை சேர்ந்த ராசகுமாரி நவமணி தம்பதிகளின் 3 வது புதல்வி கிரிஷா, நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக தனது கால் ஒன்றை கடந்த 06.12.2008 ம் திகதி இழந்துள்ளார். 9 வயதான இச்சிறுமிக்கு இரண்டு சகோதரர்களும் ஒரு சகோதரியும் உள்ளனர். யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு வருவாயிழந்து தவிக்கும் குடும்பத்திலிருக்கும் இச்சிறுமி காலை இழந்தபோதும் தான் படித்து ஒரு வைத்தியராக வருவதே தனது ஆசை என தன்னம்பிக்கையுடன் கூறுகிறார்.

தற்போது 04ம் தரத்தில் கல்விகற்கும் இச்சிறுமிக்கு பாடசாலைச்சீருடைக்கே துன்பப்படும் நிலைதான் எஞ்சியுள்ளது என எமது மன்னார் செய்தியாளர் தெரிவிக்கின்றார். கல்விக்காக கெஞ்சிநிற்கும் இச்சிறுமிக்கு உதவவிரும்புவோர் நேரடியாக பிரதேச செயலகத்தை அன்றில் சிறுமி கல்வி க ற்கும் மன்-கல்லியடி மகாவித்தியாலய அதிபரை அல்லது கிராமசேவகரை தொடர்பு கொண்டு தங்கள் உதவிகளை வழங்கமுடியும். அத்துடன் சிறுமியை நேரடியாக தொடர்பு கொள்ள விரும்புவோர் , நெருப்பு அல்லது எமது மின்னஞ்சல் ஊடாக தொடர்பு கொள்ளமுடியும்.


3 comments:

  1. Please give the contact number of the concerned person to get the details of this child.
    Thank you,
    Vilashini.

    ReplyDelete
  2. வணக்கம் விலாசினி.

    உங்கள் ஆர்வத்திற்கு நன்றி. ilankainet@gmail.com என்ற ஈமெயில் இற்கு உங்கள் மெயில் ஐடியை அனுப்பி வையுங்கள் சிறுமியின் தொலைபேசி இலக்கத்தை அனுப்புகின்றோம்.

    இலங்கைநெற் ஆசிரியர் குழு.

    ReplyDelete
  3. Arulmohan please send your email add to ilankainet@gamil.com

    ReplyDelete