இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளிகள் பட்டியலில் பிரதான குற்றவாளியென குற்றம் சுமத்தப்பட்டிருந்த விடுதலை புலிகள் இயக்கத்தின் மறைந்த தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறந்து விட்டதாக ஒப்புக்கொண்ட இந்தியா, அவரின் பெயரை அப்பட்டியலில் இருந்து நீக்கியுள்ளது.
மேலும் சென்னையில் அவர் மீது தொடரப்பட்டு வந்த வழக்கு நடவடிக்கைகளையும் கைவிட்டுள்ளதாக குற்றத் தடுப்பு பிரிவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ராஜீவ் காந்தி 1991 ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படையினரால் வெடிகுண்டு மூலம் கொல்லப்பட்டார் எனக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அவ் வழக்கின் பிரதான குற்றவாளிகளின் பெயர் பட்டியலில் இருந்து பிரபாகரன் மற்றும் பொட்டம்மன் என அழைக்கப்படும் சண்முகநாதன் சிவசங்கரன் ஆகியோரின் பெயர் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment