Monday, October 25, 2010

சிறு பான்மை அரசியலுக்கு சாவு மணியடிக்கும் உள்ளுராட்சி தேர்தல் முறை சட்ட சீர்திருத்தம்

அஷ்ஷெய்க் மஸீஹுத்தீன் இனாமுல்லாஹ், முஸ்லிம் காங்கிரஸ் முன்னாள் மஜ்லிஸ் அல்ஷுரா தலைவர்-
ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்பவற்றிலுள்ள பாராளுமன்ற மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் சிறுபான்மை முஸ்லிம் தமிழ் கட்சிகள் ஏனைய சிறு கட்சிகளுடன் ஒருமித்து உள்ளுராட்சித் தேர்தல் முறை சீர்திருத்தச் சட்ட முலத்தை நிராகரிக்க வேண்டும். இரண்டு பேரினக் கட்சிகள் தவிர்ந்த சகல சிறுபான்மை கட்சிகள் ,சிறு கட்சிகள் சகலதையும் ஜனநாயக அரசியல் நிரோட்டத்திலிருந்து ஓரங்கட்ட எடுத்துக் கொள்ளப்படும் மிகவும் பாரதூரமான இந்த வரலாற்று சதி முயற்சி குறித்து சிறுபான்மையின புத்தி ஜீவிகள் விழிப்பாக இருக்க வேண்டும்.

அரசியல் அதிகாரங்கள் பரவலாக்கப்பட்டு ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் சிறுபான்மையினரை இணைத்துக்கொள்ள வேண்டிய தருணத்தில் அதற்கு நேர் எதிராக இருக்கின்ற எச்ச சொச்ச அரசியல் பிரதிநிதித் துவங்களையும் பறித்து எடுக்கின்ற முயற்சிக்கு துணை போகின்ற சகல சிறுபான்மை அரசியல் வாதிகளும் மிகப் பெரிய வரலாற்றுத் துரோகத்தை தம் சார்ந்த சமூகங்களுக்கு இழைக்கின்றனர் என்பதனை மறந்து விடக்கூடாது

தொடர்ந்து இடம் பெறவுள்ள உள்ளுராட்சி அதிகார சபைகள் மற்றும் அரச அதிபர் நிர்வாக வலயங்கள் எல்லைகள் மீள் நிர்ணயம் செய்யப்படுவதற்கான ஏற்பாடுகளும் அவசர அவசரமாக நடந்து கொண்டிருப்பதனையும் அதனுடாக சிறுபான்மையினர் நலன்கள் பாதிக்கபடுகின்ற அபாயகரமான ஒரு சூழ்நிலையில் எரியும் நெருப்பில் எண்ணெய் வர்க்கும் பேரின அரசியல் சதி அரங்கேறுகின்றது.

கடந்த வியாழக் கிழமை ௨௧ அக்டோபர் 2010 அன்று பாராளுமன்றில் சமர்பிக்கப்பட்ட மேற்படி சட்ட முலம் விரைவில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது, ஜனாதிபதியவர்கள் தனது இரண்டாவது பதவி காலத்திற்காக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டு தனது புதிய அமைச்சர் அவையை நியமிப்பதற்கு முன்னர் பதவிகளையும் சலுகைகளையும் எதிபார்த்த நிலையிலுள்ள சகல சிறுபான்மை கட்சி களினதும் ஆதரவைப்

பெற்று மேற்படி சட்ட முலத்தை நிறைவேற்றிக்கொள்ள அரசு முணைகிறது. உள்ளுராட்சி தேர்தல்கள் திருத்தச் சட்ட மூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட முன்னர் மாகாண சபைகளின் அனுமதியைப் பெற வேண் டு மென்பது அரசியலமைப்பின் மீதான பதின் மூன்றாவது திருத்தச் சட்ட மூலத்தின் பிரகாரம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

புதிய தேர்தல் முறையின் கீழ் தொகுதி வாரி முறையும் விகிதச் சார முறையும் கலந்த ஜேர்மனிய முறை அறிமுகப்படுத்தப் படுகிறது, எனினும் ஐந்து வீத வெட்டுப்புள்ளி ஒவ்வொரு உள்ளுராட்சி உப வலயங்களிலும் (Ward) கணிப்பீடு செய்யப் படுகின்ற போது சிறு கட்சிகள் மற்றும் சிறுபான்மை கட்சிகள் பிரதிநிதித்துவத்தை இழக்க நேரிடும்.

இதே தேர்தல் முறை எதிர் காலத்தில் மாகாண சபைகள் மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களுக்கும் அறிமுகப்படுத்தப் படின் இரு பிரதான கட்சிகள் மாத்திரம் அரசியல் செய்கின்ற ஒரு நிலை உருவாவதொடு சிறுபான்மை இனங்களின்

அரசியலுக்கு சாவு மணி அடிக்கப்படும். தற்போதைய அரசியல் கலநிலவரங்களின்படி மாகாண சபைகளிளோ பாராளுமன்றத்திலோ இந்த சட்ட மூலத்தை தோற்கடிக்கும் வல்லமை எதிகட்சிகளிடம் இல்லாமல் போயுள்ளது.

உள்ளுராட்சி திருத்தச் சட்டம் 19/10/2010 செவ்வாய் கிழமை கிழக்குமாகாண சபையில் நிறைவேற்றப் பட்டது. மாகாணசபையில் உள்ள 37 உறுப்பினர்களில் ஆளும் தரப்பில் உள்ள 20 பேரில் 18 பேர் ஆதரவாக வாக்களித்ததுடன் (2 பேர் சமூகமளிக்வில்லை) எதிர் தரப்பில் உள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் 7 பேர் நடுநிலை வகித்ததுடன் 6 பேரில் 5 தமிழ் உறுப்பினர்களும் எதிர்த்து வாக்களிக்க எதிர்கட்சித் தலைவர் தயாகமகே சபையில் இருந்த போதும் வாக்களிக்கவில்லை.

சட்டத் திருத்தத்தை சபாநாயகர் சபையில் வைக்கையில் ஜனாதிபதி 10 தினங்களுக்குள் பரிசீலித்து நிறைவேற்றி அனுப்பிவைக்குமாறு கோரியுள்ளதாகதெரிவித்து சமர்ப்பித்தார்.

இது தொடர்பாக 14 நாள் அறிவித்தலோ, 7 நாள் அறிவித்தலோ வழங்கப்படவில்லை. இச்சட்ட மூலத்திற்கு ஆதரவாக வாக்களித்ததன் ஊடாக முதலமைச்சர் உட்பட ஆளும் தரப்பினர் சிறுபான்மை மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளனர்.

சட்டம் சபையில் முன்வைக்கப்பட்ட போது முதலமைச்சர் உட்பட ஆளும்தரப்பினர் இது சிறுபான்மை சமூகத்திற்கு செய்யும் துரோகம் என தெரிவிக்கின்ற போதும் எதையும் செய்யமுடியாது ஆதரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம் என்றார்கள்.

இதே சட்டமூலம் முன்பு சபைக்கு வந்தபோது 37 உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்ததால் திருப்பி அனுப்பப்பட்டது.


...............................

No comments:

Post a Comment