வெளிநாட்டுப் புலிகளுக்கு யாழ்ப்பாணத்தில் ஈபிடிபி பாதுகாப்பு.
புலிகளியக்கம் இலங்கையில் முற்றாக தோற்கடிக்கப்பட்டுள்ளநிலையில் அவ்வியக்கத்தின் வெளிநாட்டு செயற்பாடுகளை முடக்குவதற்கு அரசு பல முயற்சிகளை மேற்கொண்டுவந்தாலும் அரசுடன் இணைந்து நிற்கின்ற முன்னாள் ஆயுதக்குழுக்கள் தமது சுயதேவைகளுக்காக வெளிநாட்டுப் புலிகளுக்கு சோரம்போவது தொடர்ந்தவண்ணமே உள்ளது.
புலிகளின் அனைத்துலக செயலகத்தால் நடாத்தப்படும் தமிழ் முரசம் எனும் வானொலியின் இயக்குனரான உமைபாலன் தியாகராஜா என்பவர் அண்மையில் இலங்கை சென்றிருந்தாகவும் அவருக்கான பாதுகாப்பு மற்றும் பிரயாண வசதிகள் யாவும் ஈபிடிபி அமைப்பின் முக்கியஸ்தர் குருதேவா என்பவரால் செய்து கொடுக்கப்பட்டிருந்தாகவும் தெரியவருகின்றது.
குருதேவா தியாகராஜா பன்னெடுங்காலங்களாக புலிகளின் சர்வதேச பிரச்சார நடவடிக்களை முன்நின்று நடாத்தியவர் என்பதுடன் நோர்வே நாட்டில் இலங்கை அரசிற்கு எதிராக இடம்பெற்ற பல ஆர்பாட்டங்கள் மற்றும் இலங்கை தூதரக உடைப்பு என்பவற்றுக்கு முலகர்த்தாவாகவும் இருந்துள்ளார். புலிகளின் அனைத்துலக செயற்பாடுகளுக்கு பொறுப்பாகவிருந்த கஸ்ரோவுடன் நேரடித்தொடர்பிலிருந்து செயற்பட்டுவந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். இந்நிலையில் இவர் இலங்கைக்கு மிகவும் இரகசிய பயணம் ஒன்றை மேற்கொண்டு நாடு திருப்பியுள்ளார். புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டபோது புலிகள் சார்பாக பிரச்சாரங்களை மேற்கொண்டுவந்த பல ஊடகங்கள் தமது பாதையை திசைதிருப்பியுள்ளபோதும், தொடர்ந்தும் அவ்வியக்கத்திற்கு ஒட்சிசன் வழங்குவதற்கு முயற்சிகளை மேற்கொள்ளும் மிக முக்கிய நபர்களில் ஒருவராக கருதப்படும் இவருக்கு ஈபிடிபி யினர் பாதுகாப்பு வழங்கியுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் பலத்த சந்தேகங்களை கிளப்பியுள்ளது.
வெளிநாடுகளிலிருந்து யாழ்செல்வோருக்கான விதிமுறைகள் உள்ளபோதும், அவ்விதிமுறைகளை தாண்டிச் செல்வதற்கு ஈபிடிபி யினர் அவருக்கு உதவி புரிந்ததாக தெரியவருகின்றது. ஈபிடிபி யினர் இச்செயலை பணத்திற்காக செய்தார்களா? அன்றில் புலிகள் யாழில் அவர்களது பிரச்சாரங்களை முன்னெடுப்பதற்கு ஈபிடிபியினர் உதவ முன்வந்துள்ளார்களா என்ற அச்சம் தோன்றியுள்ளது.
0 comments :
Post a Comment