புலிகள் நாட்டின் பொருளாதாரத்தில் கை வைத்துள்ளனர்.
இலங்கைக்குள் மீண்டும் குளப்பச் சூழ்நிலையை ஏற்படுத்த முடியாதென அறிந்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆதரவாளர்கள் நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்க முயற்சிப்பதாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.
f முதலீட்டாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகைத் தருவதை தடுத்து நிறுத்தவும், இலங்கையின் உற்பத்திகளுக்கு வெளிநாட்டு சந்தையில் உள்ள கேள்விகளைக் குறைப்பதன் நோக்கமாகவும் குழுவொன்று செயற்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். லண்டனில் நடைபெற்ற மாநாடொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் புகைப்படங்களை பிரித்தானியாவில் வெளியிட்டு இலங்கைக்கு எதிராக பொய் குற்றச்சாட்டுக்களை சுமத்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆதரவாளர்கள் முயற்சிப்பதாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கூறியுள்ளார்.
0 comments :
Post a Comment