காபூல் அமெரிக்கா தேடி வரும் அனைத்துலக பயங்கரவாதி ஒசாமா பின் லாடன் பாகிஸ்தானில் வசதியாக வாழ்வதாக அல் காய்தா அமைப்பின் 2-வது செல்வாக்கு மிக்கத் தலைவருக்கு நெருக்க மானவர் கூறியிருப்பதாக நேட்டோ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் உள்ளூர் மக்களும் பாகிஸ்தானிய உளவுத் துறை அதிகாரிகள் சிலரும் ஒசாமா பின் லாடனுக்கு பாதுகாப்பு கொடுத்து வருவதாகத் தெரிய வந்துள்ளது. அல் காய்தா தீவிர வாத அமைப்பின் 2-வது நிலையில் உள்ள அல் ஜவஹிரிக்கு மிகவும் நெருக்கமானவர் ஒருவர் இத்தகவலைக் கூறியதாக பெயர்குறிப்பிடப்படாத நேட்டோ அதிகாரி ஒருவர் கூறினார்.
செப்டம்பர் 11 தாக்குதலுக்கு முக்கிய காரணகர்த்தா என்று கருதப்படும் ஒசாமா இன்னும் பிடிபடாத நிலையில் அல் காய்தா உறுப்பினர் யாரும் குகைகளில் பதுங்கியிருக்க வில்லை என்று அந்த நேட்டோ அதிகாரி கூறியுள்ளார். தலிபான் குழுத் தலைவர் முல்லா உமர் பாகிஸ்தானில் அடிக்கடி இடம் மாறிக்கொண் டிருப்பதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment