Thursday, October 21, 2010

அதிகாரத்பகிர்வு வெறும் யோசனை மட்டத்திலேயே உள்ளது.

அதிகாரப் பகிர்வு தொடர்பான முனைப்புக்கள் இன்னமும் வெறும் யோசனைகளாகவே தொடர்வதாக லக்பிம பத்த்திரிகையின் ஆசிரியர் தலையங்கத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாட்டில் ஆட்சியை முன்னெடுத்த பல அரசாங்கங்கள் அதிகாரப் பகிர்வு பற்றிய கருத்துக்களை முன்வைத்த போதிலும் அவை நடைமுறைப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் உள்ளிட்ட நாட்டில் வாழும் சகல மக்களினாலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய நியாயமான ஒர் அதிகாரப்பகிர்வுத் திட்டமொன்றை முன்வைக்க வேண்டிய அவசர அவசியம் எழுந்துள்ளதாக ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்குப் பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வு காணப்பட வேண்டும் என்பது பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே புலனான விடயம் என்ற போதிலும், இன்னமும் அதிகாரப் பகிர்வு அமுலாக்கம் வெறும் யோசனை மட்டத்தில் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

யோசனைத் திட்டங்கள் குறித்து பேசப்பட்ட போதிலும் அவை எதுவுமே நடைமுறைப்படுத்தப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடும்போக்குடைய இனவாத சக்திகளினால் இந்த யோசனைத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு அனுமதிக்கவில்லை குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆட்சி நடத்தும் காலத்தில் திட்டமிட்ட சில அதிகாரப் பகிர்வு யோசனைத் திட்டங்களைக் கூட சிலர் அதிகார மோகம் காரணமாக ஆட்சியை இழந்த பின்னர் எதிர்க்க முற்பட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலிகள் தோற்கடிக்கப்பட்டு ஒரு வருடத்திற்கு மேற்பட்ட காலம் கடந்துள்ள நிலையிலும் அதிகாரப் பகிர்வின் மூலம் நிரந்தர சமாதானத்தை நிலைநாட்ட வேண்டுமென்ற முனைப்பு தென்படவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீர்வுத் திட்டம் தொடர்பான பரீட்சார்த்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அண்மையில் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் இன்னமும் பிரச்சினைக்கான தீர்வு காணப்படவில்லை என்பது புலனாவதாகவும், உடனடியாக அரசியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment