கனடிய ஆர்சிஎம்பி கொழும்பில் கிளை அமைக்கின்றது.
உலகின் முதல்தர காவல்துறையாக கருதப்படும் கனடிய ஆர்சிஎம்பி (Royal Canadian Mounted Police) யினர் கொழும்பில் தனது கிளை ஒன்றினை அமைக்கவுள்ளதாக ரொரண்டோ ஸ்ரார் இணையத்தளம் தெரிவிக்கின்றது. இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக கனடாவிற்கு குடியேறுவோரை தடுப்பதற்காகவே இக்கிளை திறக்கப்படுவதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடா செல்லும் நோக்கில் தாய்லாந்தில் தங்கியிருந்த இலங்கையர்கள் 155 பேரை தாய்லாந்தில் கைது செய்தமை இந்நடவடிக்கையின் முதற்கட்டம் எனவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரம் ரொரண்டோ ஸ்ரார் இணையத்தளத்திற்கு வெளிவிவகார அமைச்சர் ஜிஎல் பிரீஸ் வழங்கியுள்ள நேர்காணலில் : இலங்கையிலிருந்து கனடா செல்வோர் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் செல்கின்றனர் எனவும் அவர்களுக்கு நாட்டில் அச்சுறுத்தல் என்பதில் எவ்வித உண்மையும் இல்லை என தெரிவித்துள்ளார்.
1 comments :
மிகவும் நல்ல விடயம். அதே போல் ஐரோப்பிய நாடுகளும் பின்பற்றி கள்ள அகதிகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதுடன், இதுவரைக்கும் வெளிநாடுகளில் குடியேறியவர்களின் குடியுரிமைகளை ரத்து செய்து எல்லோரையும் அவர்களின் தமிழீழம்
மண்ணுக்கு அனுப்பிவைக்க வேண்டி நிற்கின்றோம்.
Post a Comment